மெலிந்து போகிறீர். தேசமக்கள் சம்மந்தமான பொதுப் பணியில் சிறிதும் கவனம் செலுத்தும் விசாலப்புத்தியை அடைய உமக்குச் சிறிதும் அவகாசம் இல்லாத நிலையை உண்டாக்கிக் கொள்கிறீர்கள். பார்ப்பனன் உயர்வு என்கிறீர்கள். சூத்திரன் இரண்டாம் என்கிறீர்கள். வைசியர் அவன் அண்டைபடி என்கிறீர்கள். சூத்திரன் கடைசி என்கிறீர்கள். பஞ்சமன் என்கிறீர்கள். இன்றைக்கு மாத்திரம் இன்றி இவைகளை உண்டாக்கியதாய்ச் சொல்லும் பிரமன் ஒருவன் இருந்தால் அவன் காலத்திலேயே சுத்தப்பொய் என்பதை சிந்திக்க மறுக்கிறீர்கள். இந்த நிலையில் சுதத்தரம், சமத்துவம், சகோதரத்துவம் இவைகள் உமது இதயத்தில் இடம் பெறுவது எப்படி? திராவிடநாடு, 25-3-1945 * |