70 மறைமலை அடிகளார்
தமிழ்ப்பெரும் புலவர்கள், தமிழ் பற்றி எண்ணுங்கால், தமிழின் பெருமன்னராகிய அடிகளின் ஆணையையே எதிர்பார்ப்பார்கள். ஏனெனின் அடிகள் தம் “தமிழ் நூற்கள் அத்தனையும்” அவரின் தெளிந்த உள்ளம்; முடிந்த தீர்ப்பு. துன்பமற்ற சாவு, துறவுள்ளமுடையார்க்கே - ஒழுக்கமுடையார்க்கே - எவ்வுயிர்க்கும் தீங்கினை உன்னாதார்க்கே நேரும் என்பர். அடிகளுக்குப் புற்று நோயோ கண்டது? மருத்துவரோ கருவி இட்டு ஆற்ற முயன்றனர். கைகால்களோ சோர்ந்தன? உடற்புண்களோ புரையோடின? புழுக்களோ மொய்த்தன? ஐயோ என்று அலறியபடி பன்னாளோ துடித்தனர்? அடிகள் உயிர் உடலைவிட்டு நீங்கி அமைதியுலகம் அடையாது, இடைவெளியிலோ கொள்ளியாய்த் திரிந்தது? இல்லை. அடிகள் அமைதியை விழைந்தார்கள். அமைதி பெற்றார்கள். நாம் அவர்களைப் பிரிந்து அழுதாய் பயனென்ன? அவர்களின் கொள்கை எது? அதை எண்ணி, அவர்களை நம்முடனே இருக்கச் செய்வோம். தமிழர்க்கெல்லாம் அவர் நினைவு நல்வழியாகும். குறள் மலர், 29-9-50 * |