அடித்துக் கொண்டு நம் காலையே சுற்றிச்சுற்றி வந்து செத்துக் கொண்டே போவார்கள்! இதுதானே மேலாட்சியின் திருவுள்ளமும்! தமிழ்க் கடலில் கலைச்சொல், விஞ்ஞானச் சொற்களாகிய முத்துக்களை வார வேண்டுமானால், அப்படி வாரிய முத்துக்கள் ஒதுக்கப்படாதிருக்க வேண்டுமானால், தமிழ்நாட்டுக்குத் தமிழ்நாடு என்று பெயர் வரவேண்டுமானால், அப்பெயர் நிலைநிற்க வேண்டுமானால் தமிழின் அடிப்படையில் ஏற்படும் தமிழ்நாடு, இருமொழி அடிப்படை மும்மொழி அடிப்படை என்று கூறி மாறாமலிருக்க வேண்டுமானால் தமிழர்கள் என்ன செய்ய வேண்டும். ஏறத்தாழ மூன்று ஆண்டுகளாகத் தமிழ் நாட்டுக்கு ஒரு தமிழன் தலைவனாகத் திகழ்ந்ததில்லை. தமிழின் பகைவர் அப்படிச் செய்து வெற்றிபெற்று வந்துள்ளார்கள். இன்று தமிழ்நாட்டில் வியக்கத்தக்க ஒரு நிலை காணப்படுகின்றது. தமிழரின் பகைவரால் எறியப்படும் ஆயிரக்கணக்கான ஈட்டிகளின் நடுவில் கைவலுத்த காமராசர் காணப்படுகிறார், கண்கலங்கும் செந்தமிழர் பாங்கில். நம் உள்ளத்தைக் குறுகிய நோக்கங்கள் தழுவக் கூடாது. கருங்குளவிகள் பாட்டுக்குக் காதைக் காட்ட வேண்டாம். தமிழர்களின் தோள்கள் அனைத்தும் அந்த ஆலின் கிளைகளைத் தாங்கும் விழுதுகள் ஆதல் வேண்டும். தமிழ்நாடு முழுதும் ஒரே காமராசர்; காளான்கள் இல்லாத ஒரே ஆலமரந்தான் தோற்றமளிக்க வேண்டும். கிட்டாது கிட்டிய ஆலினை வெட்டி எறிய நினைப்பது விபீடணத் தன்மை. தமிழ் வான் கலைச்சொல் மழை பொழியும்; தமிழ்க் கடல் விஞ்ஞானச் சொல்முத்துச் சொரியும். தமிழர் வாழ்வு மேம்படும். தமிழரைப் பற்றித் தமிழின் பகைவர் புலிக் கனவு காண வேண்டும். |