தமிழர் பிரிந்து வாழும் இயல்பினர் அல்லர். தமிழ் முழக்கம் செந்தழலாய் எரிய வேண்டும். அப்போது இரும்புச் சிதறல்களாகிய தமிழர்கள் ஒரே இரும்புக் கூண்டாகித் திகழ்வார்கள். அவர் தமிழர்க்கு நல்லன பல செய்தார். இதை யாரும் மறுக்க முடியாது. அவர் நல்லன பல செய்ய முடியாது தவிக்கிறார். ஆம்; அதனால்தான் அவர் கையை இன்னும் வலிவு படுத்தவேண்டும். எதிரிகளிடம் சேர்ந்து கொண்டு கூத்தடிப்பதால் என்ன விளையும்? தமிழின் வெற்றி தமிழரின் அசைக்க முடியாத ஒற்றுமையில்தான் இருக்கிறது. கலைக்கதிர், 1962 * |