தும் நூல்கள் மிகப் பலப்பல மட்டுமன்று; சாதிப்பிரிவுகளே தமிழர்களில் பெரும்பாலோரிடத்தில் செயலிலேயே உள்ளன என்பதும் உண்மைதானே! ஆனால் அது இடையில் வந்த ஒட்டுவாரொட்டியான ஒருவகை முறைக்காய்ச்சல் நோய் என்பதை எவராலும் மறுக்க முடியாது! இனி இந்நாட்டில் பரவியுள்ள தமிழர்களால் மேற்கொள்ளப்பட்டுள்ள சைவம் வைணவம் ஆகிய இரண்டு சமய நூற்களும் சாதியை வற்புறுத்தவில்லையா என்று கேட்கலாம். இப்படி கேட்பவர்கள் இன்னும் சற்றே மேற்கிளம்பிச் சைவர்களிடத்திலும், வைணவர்களிடத்திலும் சாதிக் கொள்கை செயலில் வழங்கி வரவில்லையா என்றால் ஆம் வழங்கி வருகின்றது. ஆனால் இன்றுள்ள அவ்விரு சமயங்களும் இதற்குமுன் எவ்வாறிருந்தன என்பதை ஆராய வேண்டும். அந்நாளில் சைவமென்றும் வைணவமென்றும் பிரிவுபட்டிருக்கவில்லை. அன்பு, வாய்மை முதலிய நெறி பிறழாமல் வாழுங்கள் என்பதுதான் சமயமாக இருந்தது. இப்பொழுதுள்ள கோயில்களுக்கும் கழுவாய்களுக்கும் இவைபோன்ற சமயக் குறிகளுக்கும் ஆதாரமே இருந்ததில்லை என்று திருவள்ளுவர் சொல்லுகிறார். “தமிழர்களே வந்தேறிகள் கட்டிவிட்ட கட்டுக்களை நம்புகிறீர்கள். கடவுளை அடைய வேண்டுமென்றால் இன்னின்ன வகையில் நடந்து கொள்ள வேண்டுமென்று அவர்கள் சொல்லுகிறார்கள். அவற்றில் உண்மை இல்லை. நீங்கள் கடவுளை அடைய வேண்டுமானால் வையத்துள் வாழ்வாங்கு வாழ வேண்டும்” என்றார். “வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையுந் தெய்வத்துள் வைக்கப் படும்”
என்பதைத் திருக்குறளில் காண்க. |