கருத்துரை
தமிழகத்தின் தன்னேரிலாத் தனிப்பெருங் கவிஞரான பாரதிதாசன் கவிதைத் துறையில் மட்டுமின்றி நாடகம், சிறுகதை, நாவல், திரைப்படக் கதை, வசனம், பாடல்கள், இலக்கணம், சொல்லாய்வு முதலிய பல்வேறு துறைகளிலும் தமது இலச்சினையைப் பொறித்துள்ளார். இந்நூல், அவருடைய கட்டுரை வரையும் ஆற்றலுக்குச் சான்றாக விளங்குகிறது. “ மானிடன் வாழ்ந்த வரைக்கும் - இந்த வையத்திலே அவன் செய்த வரைக்கும் மானிடத் தன்மைக்கு வேறாய் - ஒரு வல்லமை கேட்டிருந்தால் அதைக் கூறாய் ! மானிட மென்பது புல்லோ? அன்றி மரக்கட்டையைக் குறித்திட வந்த சொல்லோ? கானிசை வாழ்ந்ததும் உண்டு - பின்பு கடலை வசப்படச் செய்ததும் அதுதான்! மானிடம் போற்ற மறுக்கும் - ஒரு மானிடம் தன்னைத் தன்உயிரும் வெறுக்கும்; மானிடம் என்பது குன்று - தனில் வாய்ந்த சமத்துவ உச்சியில் நின்று மானிடருக் கினிதாக - இங்கு வாய்த்த பகுத்தறிவாம் விழியாலே வான்திசை எங்கணும் நீபார் - வாழ்வின் வல்லமை “மானிடத் தன்மை” என்றே தேர்”
[தொகுதி 1, மானிட சக்தி ப-145.இக்கவிதை புதுவை முரசில் 7-12- 1931இல் ப.9இல் வெளிவந்துள்ளது.] |