பட்டது. கூனிச்சம்பட்டிலும், அதன் அண்டைக் கிராமங்களிலும் சத்த வண்டிகள் தயாராயின. ஒரு ரெட்டிமார் வீதி. அவ்வீதியில் புதுவைக் குடும்பம் பத்துக்குமேல் தங்கியிருந்தன. அக்குடும்பங்களில் ஒரு குடும்பம் மிக்க தாழ்ந்த சாதி. பக்கத்து வீட்டில் இறங்கியிருந்த குடும்பம் உயர்ந்த ஜாதி. அதன் பக்கத்தில் நடுத்தரம். எதிர்த்த வீட்டில் தங்கியிருந்ததோ கொஞ்சம் சுமார். புதுச்சேரி வேளாளக் கிழவி ஒருத்தி-ஜெர்மனியான் கப்பல் வந்தாலும் வந்தது! இந்த இடத்தில் கீழ்ச்சாதி - மேல்ஜாதி என்று இல்லாமல் எல்லாரோடும் சரிசமானமாய் இருக்க நேரிட்டது என்று சொன்னாள். பக்கத்து வீட்டில் நின்றிருந்த கீழ்ச்சாதி புதுவைப் பெண்ணின் காதில் இது விழுந்தது; அப்பெண், ‘ஏன் முதலியார் வீட்டம்மா! அந்தக் கீழ்ச்சாதி நேற்று நினைப்பில்லாமல் போனதென்ன? இன்றைக்குத்தான் நினைப்பு வந்தது என்றால் உங்கள் மேல்ஜாதிப் பெருமையைச் சொல்லிக் கொள்ளாதிருந்தால் முழுகிப் போவது ஒன்றுமில்லையே’ என்றாள். இதுதான் சொன்னாள். கிழவிக்கு வந்தது கோபம். தாழ்ந்த ஜாதியின் வர்ணனை ஆரம்பிக்கப்பட்டது. அந்த ஜாதிக்கே உரிமையென்று பல செயல்கள் வெளிவந்தன. தாழ்ந்த ஜாதிப் பெண் திகைத்தாள். அவளுக்குத் திட்டத் தெரியாது. நாணமும் பொறுக்க முடியவில்லை. கண்ணீர் விட்டாள். ஆனால் அவள் புருஷன் புதுவைக்கு போகச் சத்தவண்டியோடு வந்து விட்டான். இதைக் கேள்விப்பட்டான். நன்றாகக் கிழவியை திட்டினான். கிழவியின் மருமகரான முதலியார் உள்ளே சாப்பிட்டுக்கொண்டிருந்தவர் காதில் கேட்டது. அவரும் வந்து தாழ்ந்த ஜாதி ஆண்பிள்ளையை எதிர்த்தார். அத்தண்டையில் அவரின் காரியக்காரனும் முதலியாருக்கு உதவி செய்தான். மேலும் தாழ்ந்த ஜாதிப்பாடல்கள் நடந்து கொண்டிருக்கின்றன. தடிகள் உபயோகிக்கப்பட்டன. விஷயம் பரவிற்று. உள்ளூர்த் தாழ்ந்த ஜாதிக்காரர்களும் அங்கு நெருங்கினார் |