| 
 கள். மேல் ஜாதியாரும் நெருங்கினார்கள். இரண்டு நிமிஷத்தில் இருபக்கத்திலும் பத்துப் பேர்கள் வீதம் நின்று,ஆயுதங்களைச் சுழற்றினார்கள். அடுத்த இரண்டாவது நிமிஷம் நூறுபேர் வீதம் இருதரப்பிலும் சேர்ந்தார்கள். அதற்குமேல் உயர்ஜாதிக்காரருக்குக் கூட்டம் சேரவில்லை. எதிரிகளின் தொகை அதிகப்பட்டுக் கொண்டே வந்தது. முடிவு: 20 பேருக்கு ஆபத்தான காயம். ஒருவன் இறந்தான்; 15 பேருக்குக் கைமுறிவு, கால்முறிவு! கூனிச்சம்பட்டில் ஆஸ்பத்தரி ஏது? புதுவை ஆஸ்பத்திரியை நோக்கி வண்டிகள் வரிசையாக நோயாளிகளையும் சொந்தக் காரர்களையும் ஏற்றிப் போய்க் கொண்டிருந்தன. வழியில் என்ன விஷயமென்று கேட்பவர்களுக்கெல்லாம் பதில் சொல்ல வெட்கமாயிருந்தது.  வெட்கக்கேடு. ஜெர்மனியின் அக்ரமமான சண்டைக் கப்பலுக்குத் தப்பித்துக் கொள்ளுவது சாத்தியம். ஆனால்,  மனு வகுத்த ஜாதி என்னும் அக்ரமத்திற்குத் தப்பி உயிர் பிழைப்பது முடியவில்லை.  - புதுவை முரசு, 12-1-1931  * |