பக்கம் எண் :

39

7
சனியனை வணங்குவது சரியா?


(கிறுக்கன் கூறுவது)

சனியன் என்பவர் யார்? அவருடைய டூட்டி என்ன? என்பதை முதலில் விசாரிப்போம். சனியன் என்பவர் இந்து மதத்திலுள்ள கடவுளர்களில் ஒருவரென்றும் அவருடைய வேலைகள் மக்களைக் கஷ்ட நஷ்டங்களில் ஈடுபடும்படி செய்வதென்றும், அவர் ‘பிடியாத’ ஆணோ பெண்ணோ உலகில் – ஏன்! கடவுளர்களில்கூட ஒருவருமிலர் என்றும் ஆத்திகப் பேர்வழிகளும் அநேக புராணங்களும் சொல்லுகிறார்கள் - சொல்லுகின்றன. அந்தச் சனியனைப் பற்றி அநேக சமாச்சாரங்கள் கூறப்பட்டிருக்கின்றன. எல்லா விஷயங்களையும் விரிவாகக் கூற வேண்டுவது அவசியம் என்று நான் நினைக்கவில்லை. எனவே இரண்டொரு விஷயங்களைப் பற்றி மட்டும் சொல்லுதல் சாலும். (ஓ! சாலும்) என்ற மொழி தெலுங்கு மொழி; அதைக் கூறியதற்குத் தமிழ் மொழிப் பண்டிதர்கள் சண்டைக்கு வந்து விடலாம். எனவே ‘வாபஸ்’ பெற்றுக் கொள்ளுகிறேன்!

அரிச்சந்திரன் என்பவரை முன்னொரு காலத்தில் ‘கனம் சனியன்’ (லேசானவரல்ல) பிடித்து ராஜ்ஜியம், மனைவி, பிள்ளை முதலியவர்களை எல்லாம் இழக்கும்படி செய்து, கிட்டி மாட்டவும், புலையனுக்கு அடிமையாக இருந்து சுடலை காக்கவும், தன் பிள்ளையைப் பாம்பு தீண்டி இறக்கவும், தன் மனைவியைத் தன் கரத்தால் வெட்டவும், தன் மனைவியை விற்கவும் இன்னும் பல துன்பங்களை அனுபவிக்கவுமாக அந்த ‘சனீஸ்வரன்’ திருக்