பக்கம் எண் :

40

கருணை பாலித்தாராம். ‘ஹிஸ்கோலி எனஸ்’ (கோலி நோஸ் என்று நண்பர்கள் தப்பாக எண்ணிவிடாதீர்கள்!) ஸ்ரீஇராமன் அவர்களைக் காட்டில் பதினான்கு வருட காலம் வனவாசம் செய்யும்படி ஆக்ஞாபித்ததும், அவருடைய மனைவியாகிய - சே! அப்படிச் சொல்லக் கூடாது, லோக மாதாவாகிய ஜானகியை இராவணன் என்ற ‘ராட்சதன்’ ‘அடித்துக் கொண்டு செல்லும்படி’ச் செய்ததும் அநத்ச் சனியன்தானாம்! அங்கிங்கெனாதபடி எங்கும் பிரகாசமாய் நிறைந்திருக்கும் ஈஸ்வரனைப் பிச்சை யெடுத்துப் புசிக்கும்படி செய்ததும், செருப்படி கல்லடி மலரடி வில்லடி முதலிய ‘பூசைகளை’ப் பெறும்படி செய்ததும், நஞ்சைப் புசிக்கும்படி செய்ததும் அந்தக் கருங்கடவுளாகிய சனியன்தானாம்! இந்திரனுக்கு ஆயிரம் யோனிகள் உண்டாகும்படி செய்தது சனியன்தானாம்! ஆறுமுகக் கடவுளை வேங்கைமரமாகச் செய்ததும் சனியன்தானாம்! இன்னும் சனியன் செய்த ‘திருவிளையாடல்’களைப் பற்றிய செய்திகள் புராணங்களில் எவ்வளவோ மிளிர்கின்றன. நான் ஏற்கனவே கூறியபடி அதிகம் கூறல் அநாவசியம் என விட்டுவிட்டு மேற்செல்கிறேன்.

“இந்தக் கொடுமையை எங்கே சொல்லி முறையிடுவதடி, தங்கச்சி!’ எனச் சில பெண்கள் கூறிக்கொள்வதுண்டு. அதைப் போல நானும் சொல்ல வாயெடுத்தேன் ..... எடுத்தேனா! ஆம். வாயெடுத்துக் கூறுவதற்குள் சே! சே!! அப்படிச் சொல்லிக் கொள்வது பெண்களல்லவா! என்ற எண்ணம் உண்டாகிக் கூறவிடாமல் ‘பிரேக்’ போட்டுவிட்டது. என்ன வேடிக்கை பாருங்கள். ‘சனியன்’ ஒரு கடவுளாம்!’ அவர் கடவுளர்களைக்கூடத் துன்புறுத்துவாராம். அதிலும் தன்னைப் படைத்த பெரிய கடவுளைக்கூட அல்லல் அனுபவிக்கும்படி செய்வாராம். எனக்கு நினைக்க நினைக்க சிரிப்புதான் பொங்குகிறது! ஆ! ஆ!! ஆ!!! ஹீ! ஹீ!! ஹீ!!!

எதைப் பற்றியோ கூறவந்தவன் எங்கெங்கெல்லாமோ சுற்றிவிட்டேன்! அதற்காக நண்பர்கள் வருந்தினா