பக்கம் எண் :

41

லும் சரி, மகிழ்ந்தாலும் சரி, இனி எடுத்துக் கொண்ட - இல்லை இல்லை! சொல்லவந்த, அட இழவே! எழுத வந்த - சீ! சீ!! சனியனே! ..... ஆம்! ஆம்!! ‘சனியனை வணங்குவது சரியா?’ என்பதைப் பற்றி உங்கள் பார்வைக்கு - அதுவுமில்லாவிட்டால் செவிக்கு என் கருத்தைத் தெரிவிக்கிறேன்!

“சனி ஈஸ்வரன்’ தொழில் மக்களைக் கெடுப்பதாகும் என்று ஆத்திக அன்பர்கள் திருவாய் மலர்ந்தருளுகிறார்கள். அப்படியிருந்தால் சனியனை வணங்குவது என்பது கசாபுக் கடைக்காரனிடத்தில் ஆடு தன்னை ஒப்புக் கொடுப்பதைப் போலவும் திருடன் தலையாரி வீட்டில் ஒளிந்து கொள்ள முயல்வதைப் போலவுமே யாகின்றதல்லவா?’ ‘குழந்தையும் சாமியும் கொண்டாடுமிடத்தில்’ என்பது ஒரு பழமொழி. சாமியை மக்கள் விரும்பிக் கொண்டாடினால்தான் அந்த மக்களிடத்தில் இருப்பார் என்று சொல்லப்படுகிறது. எனவே சனியனை விரும்பிக் கொண்டாடினால்தான் அவர் மக்களைக் கெடுக்க வருவார். அவரை மதியாமலும் வணங்காமலும் விட்டுவிட்டால் அவர் வரமாட்டாரல்லவா? மக்களைத் துன்புறுத்தும் சனியனை வணங்குவது மடமையும் பகுத்தறிவற்ற தன்மையுமே யாகும். ஆகவே சனியனைக் கண்ட கண்ட இடத்திலெல்லாம் சாணி கரைத்த அபிஷேகத்தாலும் ‘ஆயிரக்காலி’யாலும் விரட்டி விரட்டி - மூச்சுத்திணறத் திணற அடிப்பதன் மூலமாக ‘சனியன் கடாட்ச’த்தினின்று விடுபடலாம். அதை உணர்ந்து நடவாமல் எண்ணெயையும் எள்ளையுங் கொண்டு அவரைப் பூசித்துக் கொண்டு திரிவது அவரை வலிய வீட்டுக்கு அழைப்பதே ஆகுமன்றோ? (ஒரு சிறு சந்தேகம்)! எண்ணெய் என்றால் எள்-நெய் என்பதே பொருள் என்று பண்டிதர்கள் கூறுவார்கள். அப்படியானால் என்னையும் சனியீஸ்வரனுக்குப் படைப்பது தப்பாகாதா?

ஆகவே என் அபிப்பிராயம் இப்படியிருக்கும்போது ‘சனியன்’ என்னைப் ‘பிடிக்க’ முடியுமா? என நான்