பக்கம் எண் :

42

கடாவுகிறேன். சனியன் என ஒரு கடவுள் இல்லை என்பதே கிறுக்கனின் பிரத்தியேக நம்பிக்கை. ஒருக்கால் சனியன் இருந்தாலும், நான் சனியனைப் போற்றுபவனல்லனாதலால், சனியன் என்னிடத்தில் ‘வாலாட்ட’ முடியாது! ‘சனியன்’ மட்டுமல்ல, சிவன், விஷ்ணு, ஆறுமுகன், யானைமுகன், சோணையன், கறுப்பன், இருளன், ஆண்டவன், ‘அல்லா’ என்று கூறப்படுகின்ற எந்தக் கடவுளையும் நான் ஒரு சிறிதும் மதிப்பவனல்லன். எனவே எந்தச் சாமியும் என்னிடத்தில் ‘பல்லை யிளித்துக்கொண்டு’ நெருங்கவோ, யோகக்ஷேமம் விசாரிக்கவோ வர முடியாது. முடியாது. முடியாது என்று இதன் மூலமாகப் பறையறைந்து முடிக்கிறேன். ஆ! ஆ!! ஆ!!!

- புதுவை முரசு, 16-2-1931, பக்கம்5-6

*