பக்கம் எண் :

48

தானம், இத்தாலி முதலிய எல்லாத் தேசங்களிலும் இந்நாள் ஏற்பட்டிருக்கும் சீர்திருத்த இயக்கம் எல்லாவற்றிலும் இந்தியாவில் ஏற்பட்டிருக்கும் சுயமரியாதை இயக்கம் ஒன்றே இன்றைய இந்தியாவின் நிலைமைக்குப் பொருத்தமானது என்பது இந்தியாவின் நிலையை உள்ளூர அறிந்த அகில அறிஞர்களின் அபிப்பிராயம். ஆயினும் மற்ற தேசங்களில் ஏற்பட்டிருக்கும் சீர்திருத்த இயக்கங்கட்கு அவ்வவ்விடங்களில் பொது மக்களால் ஏற்படும் எதிர்ப்பை விட இந்தியாவில் ஏற்பட்டுள்ள சீர்திருத்த இயக்கத்திற்கு இந்தியாவிலுள்ள எதிர்ப்புகள் மிக அதிகம். இந்தியர்களின் குருட்டுப் பிடிவாத இயல்பே இதற்குக் காரணமாகும். இதனால் தேச முற்போக்குத் தடைப்படுவதில் கொஞ்சமும் கவலை செலுத்துவதில்லை. இந்த முரட்டுப் பிடிவாதத்தால் தேச முற்போக்கை நாடி யுழைக்கும் தலைவர்கட்கு ஏற்படும் சிரமமும் கொஞ்சமன்று. அவர்கள் அதை வெளிக்காட்டிக்கொண்டால் மூடஜனங்கள் தம்மை ஆதரிக்காமற் போய்விடுவார்கள் என்று சும்மா இருந்து விடுவார்கள். பழைய பழக்க வழக்கங்களைக் கொண்டு ஜீவிக்க இருக்கும் சுயநலக்காரருக்கோ இதனால் குஷால் ஏற்பட்டுவிடுகிறது. சீர்திருத்தக் கொள்கைகளைப் பற்றியும் சீர்திருத்தவாதிகளைப் பற்றியும் கரடிவிடத் துவக்கி விடுகிறார்கள். அந்தக் கரடிகளை ஆதரிக்கவோ கபடமற்ற மக்கள் தாராளமாய் முன்வந்து விடுகிறார்கள். சுயமரியாதை இயக்கம் நன்று என்று ஒருவன் சொன்னால் சொன்னவனின் தகப்பனிடம் போய் என்ன உங்கள் பிள்ளை பறையனாய்ப் போய்விட்டானா என்று சொல்லிவிடுவது எதிரிகள் வேலைப்பாடு. நீ சீர்திருத்தம் சொல்லுவதாவது - நான் கேட்பதாவது என்பது இன்னும் சிலருடைய கேள்வி. எல்லாம் சரிதான்! கடவுள் இல்லை என்கிறார்கள். அதற்காகத்தான் சுயமரியாதைக் கொள்கை வேண்டாம் என்கிறேன் என்பது மற்றொருவகை ஏற்பாடு. சுயமரியாதையானது பெண்களையெல்லாம் விபசாரிகளாகச் சொல்லுகிறது என்பது இன்னொருவரின் பிரசாரம். உம்! சுயமரியாதை சில பார்ப்பனர்களிடம்