கப்பட வேண்டும்’, ‘பிள்ளைபெறுவது கடவுளாலா? ’ முதலிய கட்டுரைகள் ‘உண்மை’ இதழிலும் (14-5-1970); 14-7-1970, மார்ச்சு 1970) ‘தமிழ்’ எனும் கட்டுரை ‘குமரி மலர்’ இதழிலும் (டிசம்பர், 1968) “சாதி ஏன்? ” எனும் கட்டுரை “பாரதிதாசன்” குயில் என்ற இதழிலும் கவிஞருடைய கட்டுரை ஆளுமை இலக்கியத்தையும், கொள்கை வலிமையையும் வெளிப்படுத்தும் முகத்தான் மீண்டும் பதிப்பிக்கப்பட்டுள்ளன. “அறிவுப்பாதை” இதழில் மட்டும், “கடவுள் வேண்டியதில்லை”, “உலகியலும் கடவுளியலும்” ஆகிய இரு கட்டுரைகள் எளிமை கருதித் தலைப்பு மாற்றம் செய்யப்பட்டுள்ளன. புதுவை முரசில் அக்கட்டுரைகளின் தலைப்புகள் முறையே, ‘கடவுள் வேண்டியதில்லை’, ‘லௌகிகத்தின் துஷ்டப்பிள்ளை வைதீகம்’ என்பதாகும். பாரதிதாசன் புதுவை முரசில் எழுதிய “லௌகிகத்தின் துஷ்டப்பிள்ளை வைதீகம்” (மார்ச்சு 1932) சுயமரியாதைக்காரர்களே, தொலைந்து போய்விடுங்கள்” (6-4-1931) ‘கடவுள் வேண்டியதில்லை’ (8-6-1931) ‘புதுவையில் பெரும் காற்று’ (18-5-1931) ‘சுயராஜ்யம் வேண்டும்’ (20-7-1931) ஆகிய ஐந்து கட்டுரைகள் 1955ஆம் ஆண்டு புதுச்சேரி ஞாயிறு நூற்பதிப்பகத்தார் வெளியிட்ட ‘பாரதிதாசன் கதைகள்’ என்ற நூலில் இம் முயற்சிக்கு முன்னரே தொகுக்கப்பெற்று வெளிவந்துள்ளன. இந்நூலில் பாரதிதாசன் எழுதிய 73 கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. “பாரதிதாசனின் கதைகள்” என்ற நூலில் வெளிவந்த ஐந்து கட்டுரைகள் தவிர, மீதி 68 கட்டுரைகள் முதன் முதலாகத் தமிழன்பர்களுக்குத் தொகுக்கப்பெற்று நூல் வடிவாகத் தரப்படுகின்றன. ‘குயில்’ இதழில் பாரதிதாசன் தனிப்பட்ட முறையில் கடுமையாகத் தாக்கி எழுதிய ‘அண்ணாதுரையா, எனக்குப் பொற்கிழி அளித்தார்? ’ 30-9-1958; 7-10-58 |