28-10-1958) ‘குறுக்கில் பாயும் குருசாமி’ 15-3-1960 ஆகிய கட்டுரைகளும் இன்னும் சில கட்டுரைகளும் இந்நூலில் இடம் பெறவில்லை. 1961ஆம் ஆண்டு சூலைத் திங்கள், “பாரதிதாசனின் கதைகள்” என்னும் நூலின் இரண்டாம் பதிப்பை வெளியிட்ட சென்னை, முத்துமணி பதிப்பகத்தார் பின் அட்டையில், ‘அழகான ஆர்ட் பேப்பரில்’ பாரதிதாசன் கட்டுரைகளைத் தொகுத்து விரைவாக நூல் வடிவில் தருவதாக அறிவித்தார்கள். ஆண்டுகள் 22 உருண்டோடியும் இன்னும், ‘பாரதிதாசன் கட்டுரைகள்’ நூல் வடிவம் ஆக்கப் பெறவில்லை. பூம்புகார் பிரசுரத்தின் தூண்டுதலாலும், பாவேந்தர் குடும்பத்தாரின் அன்புமிக்க அரவணைப்பாலும், என்னுடைய முயற்சியாலும் இன்று தமிழுலகத்திற்குப் பாரதிதாசன் கட்டுரைகள், “மானுடம் போற்று” என்ற தலைப்பின் மூலம் கிடைக்கின்றன. தமிழின் ஆழத்தையும் பரப்பையும் அழகையும் ஆய்வு செய்வதற்காக நிறுவப்பட்டுள்ள ஆய்வு நிறுவனங்கள் முனைந்து நின்று செய்ய வேண்டிய பெரிய பொறுப்பை எளியேனாகிய நான் என் தலைமேல் போட்டுக் கொண்டு இயன்ற அளவு செப்பனிட்டுச் செய்துள்ளேன். பாரதிதாசனின் புனைபெயர்களைப் பற்றிய சில விளக்கங்களை இங்குத் தருதல் மிகவும் வேண்டற்பாலது. ‘புதுவை கே.எஸ். பாரதிதாஸன், ’ ‘கே.எஸ்.ஆர், ’ ‘கே.எஸ்., ‘கிண்டற்காரன், ’ ‘கிறுக்கன், ’ ‘கண்டெழுதுவோன், ’ முதலிய பெயர்களில் பாரதிதாசன் எழுதியதாகப் ‘பாரதிதாசனின் கதைப்பாடல்’ எனும் எனது ஆய்வேட்டில் குறிப்பிட்டுள்ளேன். (ப. 323) 1. ‘புதுவை கே.எஸ். பாரதிதாஸன்’ என்னும் பெயரில் தொடக்க நாளில் கதைகள், கட்டுரைகள் எழுதியுள் |