ளார். புதுவை கே.எஸ். பாரதிதாசன் என்பதை ஆங்கிலத்தில் ‘K.S.R.’ என்று சுருக்கிக் கொண்டு (பாரதிதாசன் பார்வையில் பாரதி, ப.34) அப்பெயரிலும் கட்டுரைகள் எழுதியுள்ளார். 2. ‘கிண்டற்காரன்’ என்பது பாரதிதாசனின் பிறிதொரு புனைபெயராகும். 1931இல் புதுவையிலிருந்து வெளிவந்த ‘சுயமரியாதைச் சுடர்’ என்னும் பாரதிதாசன் நூலின் மேலட்டையில் ‘பாரதிதாசன், மே/பா. ‘கிண்டற்காரன்’ என்று குறிப்பிடப்பட்டிருப்பதும், ‘பாரதிதாசன் கதைகள்’ என்ற நூலில் ‘கிண்டற்காரன்’ என்ற பாரதிதாசன் புனைபெயர் சூட்டப்பட்டிருப்பதும் (ப.77)மேலும் புதுவை முரசில், ‘கிண்டற்காரன்’ என்ற புனைபெயரில் எழுதிய கதைகளும் கட்டுரைகளும் அந்நூலில் இடம் பெற்றிருப்பதும் இதற்குச் சான்றாகும். 3. ‘கிறுக்கன்’ என்பதும் பாரதிதாசனின் புனைபெயராகும். புதுவையிலிருந்து 1930 முதல் 1932 வரை வெளிவந்த ‘புதுவை முரசு’ எனும் தன்மான இயக்கத் தாளிகைக்குக் ‘குத்தூசி குருசாமி’ என்னும் இதழுக்கு ஆறு திங்கள் ஆசிரியப் பொறுப்பு ஏற்றிருந்தார். (29-12-1930-4-5-1931). 1964ஆம் ஆண்டு ஏப்ரல் திங்கள் 21ஆம் நாள் சமூக அநீதிகளையும், பொருளியல் ஏற்றத் தாழ்வுகளையும் எதிர்த்து எழுதிப் போராடிய பாவேந்தர் பாரதிதாசன் மறைந்தார். அவருடைய நினைவைப் போற்றும் வண்ணம் குத்தூசி குருசாமி அப்போது தாம் நடத்தி வந்த ‘அறிவுப்பாதை’ இதழில், புதுவை முரசில் பாரதிதாசன் எழுதிய கட்டுரைகளைத் தொடர்ந்து, ‘கிடைக்க முடியாத கட்டுரை’ என்ற தலைப்பில் வெளியிட்டு வந்தார். அவற்றுள் ஒன்று: ‘ஙங்ஙஃ’ என்ற கட்டுரையாகும். இக்கட்டுரை பாரதிதாசன் எழுதியதாகக் குத்தூசி குருசாமி குறித்துள்ளார். (அறிவுப் பாதை 14-8-1964) புதுவை முரசு 1932ஆம் ஆண்டு மார்ச் திங்களில் வெளியிட்ட |