பக்கம் எண் :

55

பெற்றோர் என்பவர் தமது பிள்ளைகட்கு தாய் தந்தையர்கள்; ஆடவரும் பெண்டிருமாகிய டாக்டர்களோ அச்சமூகத்திற்கே தாய் தந்தையாவார். அங்ஙனமிருக்க அநுதினமும் சுயமரியாதைக் கொள்கைகளை நடவடிக்கைகளை அறிந்து அனுசரித்து வரும் டாக்டர்களுமா எதிர்க்க வேண்டும்?

நவீன முறையில் வைத்தியம் பயின்றவர்கள் அந்தப் பயிற்சிப் புத்தகத்தில் சுயமரியாதைக்கு விரோதமான வரிகள் ஒன்றையும் காட்டமுடியாது. சுயமரியாதைக்கு விரோதமாக ஒரு டாக்டர் தமது சுகாதார போதனையை மக்களுக்குச் சொல்லுவதென்றால் அது “ஆஸ்பத்திரிகளையெல்லாம் இடித்துப் போடுங்கள்” என்ற வார்த்தையாகத்தான் இருக்க முடியும். இதைக் கவனித்தால் சுயமரியாதை வாத்தியார்களாகிய டாக்டர்கள் சுயமரியாதையை எதிர்ப்பது மேலுக்கே.

- புதுவை முரசு, 23.3.1931.

*