பக்கம் எண் :

59

தலியைப் பிணியினின்று நீங்கும்படியோ பிழைத்துக் கொள்ளும்படியோ செய்யாமல் ‘தனது இருப்பிடத்திற்கே அழைத்துக் கொண்டார்!’ அதன் பிறகு பண்டித மோதிலால் நேரு வியாதியாயிருந்த போதும் அதே மாதிரி ஏன், அதைவிட மேலாகவே பலராலும் பிரார்த்தித்துக் கொள்ளப்பட்டது. அதுவாவது கடவுளால் கவனிக்கப்பட்டதா? இல்லை என்பது உங்கள் எல்லோருக்கும் தெரிந்ததே. இவை பத்திரிகை உலகில் வெளிவந்தவை. ஆனால் பத்திரிகை உலகிற்குத் தெரியாமல் நடந்திருக்கும் - நடந்து வரும் பிரார்த்தனைகள் கணக்கற்றவை. அவைகளும் விசாரித்துப் பார்ப்பின் கடவுளால் நிராகரிக்கப்பட்டிருப்பதாகவே தெரியலாம். இரண்டொருவர் பிழைத்திருந்தால், அது பிரார்த்தனையின் பயனாக இராது. ஆனால் அதன் காரணம் அநேகமாக டாக்டராகவே இருப்பார். ஆகக் கூடி நான் விரும்புவதெல்லாம் ‘கடவுளிடம் பிரார்த்திப்பதைவிட வைத்தியரிடத்தில் பிரார்த்தித்துக் கொண்டால் பெரிதும் நன்மையை அடையலாம்’ என்பதுதான். கடவுளை நம்புகிறவர்கள் கடவுளைப் பிரார்த்திப்பது பெரிய முட்டாள் தனமாகும். ஏனென்றால் கடவுளுடைய அநுமதிப்படியும் விருப்பத்தின்படியுமே ஒருவருக்குப் பிணி உண்டாகிறது என்று ஆஸ்திகச் சட்டம் அறைவதால்தான். ஆனால் கடவுளை நம்புவதை ஒழித்தவர்கள் வைத்தியத்தின் மூலம் பிணியை நீக்க விரும்பின் அது சரியே!

- புதுவை முரசு 30.3.1931; பக்.8-9

*