பக்கம் எண் :

61

லுடைத்துப் பல்லால் சாறு பிழிந்துண்டும் வந்தனர். இதில் முதல் நூற்றுவர் மற்ற நூற்றுவரின் சம்பந்தம் பெறாத வரை செயலில் முன்னேற்றம் அடைவது வழி இல்லை.

அறிவு பெற வழியில்லை. இருவகையினரும் சம்பந்தம் பெற்ற பின்னரே கல்லுருளையால் கரும்பு பிழிந்து சாறுண்ணும் நிலை ஏற்பட்டிருக்கும். ஒருவன் மற்றொருவனிடம் சம்பந்தம் பெறுவதென்றால், அறிவு, குணம், செயல், வாழ்க்கை முறைகளில் ஒன்று படுவதேயாகும். ஒருசார்பு மக்களிடை மூடத்தனமே இருக்கும் என்றாவது, மற்றொருசார் மக்களிடை அறிவுடைமையே இருக்கும் என்றாவது எப்போதும் எங்கும் யாராலும் சொல்ல முடியாது. இப்படி எண்ணிப் பண்டை நாள் முதல் இந்நாள் வரை தனித்தனி வாழ எண்ணியிருப்பாரா? இருப்பினும் அவ்வெண்ணம் வீழ்ச்சி பெற்றதாலேயே இன்றைக்குள்ள இத்தனை அறிவாவது தேசமக்களுக்கு ஏற்பட்டது.

கிராம சம்பந்தமான விதைத்தல், அறுத்தல், மாடு மேய்த்தல் முதலிய கிராமியமும் நகரச் சம்பந்தமான நாடுகாத்தல், கல்வி வளர்த்தல், பொதுமை ஓம்பல் முதலிய நாகரீகமும் சம்பந்தப்பட்டதான சம்பதியே (சம்பத்து) இந்நாள் நாம் அடையும் சம்பந்தி என்பதும் பொய்யல்ல. இந்நாட்டில் நாம் அடைந்துள்ள சம்பத்து அதிகமில்லை என்று வருந்துகிறவர்கள் இந்நாட்டுப் பெருமக்கள் அனைவரும் தங்கள் குணம் செயல் அறிவு வாழ்க்கை முறைகளில் தக்கபடி சம்பந்தம் கொள்ளவில்லையென்று வருந்த வேண்டும். நகரமும் நகர சம்பந்தமான நாகரிகமும் கிராமமும் கிராம சம்பந்தமான கிராமியமும் சம்பந்தப்படுவது தான் சம்பத்து என்பதன்று. குறிஞ்சி, நெய்தல், மருதம், முல்லை, பாலை முதலிய ஐவகை நிலத்து மக்களும் குளிர்நில மக்கள் சுடுநில மக்கள் என்ற இருநில மக்களும் உயர்நிலை மக்கள், தாழ்நிலை மக்கள், நடுநிலை மக்கள் என்ற பலவகை மக்களும் மதமக்கள் சாதிமக்கள், குல மக்கள், குருமக்கள், சீட மக்கள், ஆளுமக்கள், அடிமை மக்கள் ஆகிய அனைத்து மக்களும் சம்பந்தம் அடையும்