பக்கம் எண் :

66

பிறகு தென்னாட்டில் தமிழர் நல்ல நிலைமையை அடைந்தனர். ஆரியர் அவர்களின் ஆக்கத்தை எண்ணி அதையும் அடையத் தென்னாடு போந்து தமது கொள்கையை ஒப்புக்கொள்ளச் சொல்லிப் பலவாறு வேலை செய்தார்கள். இவ்வேலை அயோக்கியத்தனமே.

இதைத் தமிழர் சிலர் ஒப்புக் கொண்டனர். சிலர் எதிர்த்தனர். இரு சாரார்களில் ஒரு சாரார் மூடர்கள். பழந்தமிழர்களின் தமிழ் நூற்கள் நாகரிகங்கள் அனைத்தும் மறைந்து போகப் பல தந்திரம் நடந்திருக்கிறது. தந்திரக்காரர் அயோக்கியர்; இதில் சிலர் ஏமாந்தனர். ஏமாந்தவர் மூடர்கள். சிலர் ஏமாறவில்லை. ஏமாறாதவர்கள் புத்திசாலிகள். கால ரீதியில் ஆரியர்களும் தமிழர்களும் கலந்து கலந்து கலப்பு ஆரியர்களை உண்டு பண்ணினார்கள். கலப்பு ஆரியர் தனியாக உயர்ந்தவர்கள் என்பதற்கும், மற்றவர்கள் தாழ்ந்தவர் என்பதற்கும், உயர்ந்தவர் உயர்ந்த அந்தஸ்தில் இருக்க வேண்டும் என்பதற்கும் மற்றவர்கள் தாழ்ந்த அந்தஸ்தில் இருக்க வேண்டுமென்பதற்கும் - பிறகு நூற்கள் ஏற்பட்டன. இந்த இடத்தில் உயர்வு தாழ்வு ஏற்படுத்துவதன் மூலம் அந்தஸ்தைப் பலப்படுத்த முயன்றவர்கள் அயோக்கியர்கள் என்றும், அதை ஏற்றுக் கொண்டவர்கள் மூடர்கள் என்றும் கொள்ளாமல் என் செய்வது?

இதன் பிறகு ஓர் சார்பினரின் ஏற்பாடு தீமையை உண்டு பண்ணுகிறது என்றும், நல்வழி தேட வேண்டும் என்றும் பல்வேறு காலத்தில் பலரால் பல சீர்திருத்தங்கள் செய்யப்பட்டன. சீர்திருத்தம் சொன்னவர்கள் புத்திசாலிகள்; அதை நிராகரித்தவர்கள் மூடர்கள். அதைப் பின் நாளில் மதங்கள் என்றும், அவை கடவுள்களால் சொல்லப்பட்டவை என்றும் சொன்னவர்கள் எல்லோரும் சுயநலமுள்ளவர்கள். சுயநலக்காரர்கள் மூடர்களா? புத்திசாலிகளா? இதைச் சுஜனரஞ்சனி சொல்லட்டும். கடவுள் ஒரு காலத்தில் ஒரு மதத்தைச் சொல்லியிருந்தால் ஓர்