பக்கம் எண் :

67

இந்து ஒரு கிறிஸ்தவராக மாறுவாரா? ஒரு கிறிஸ்தவர் மகம்மதியராக மாறுவாரா?

மற்றொரு கிறிஸ்தவர் இந்துமத மென்பதன் மூலம் இந்தியாவில் ஏற்பட்டுள்ள சமூகச் சட்டத்தை நான் கைவிட்டுப் போட்டு எல்லாவகையிலும் வெள்ளைக்கார சட்டத்தையே மேற்கொள்ளுகிறேன் என்று சொல்லுவாரா? இந்துவாயிருந்து கிறிஸ்தவராகியிருப்பவர்கள் எத்தனை கோடி? இந்துவாயிருந்து முகம்மதியராகியவர்கள் எத்தனை கோடி? பல கோடியல்லவா?

பரமசிவன் சொன்னதாகவோ விஷ்ணு சொன்னதாகவோ உள்ள இந்து மதத்திலிருந்து பல கோடி மக்கள் வேறு மதத்திற்கு குதித்தால் பரமசிவன் மதம் சொன்னதாய்ச் சொல்லும் முன்னோர் முட்டாள்கள் என்றாவது, அதை அப்போது ஏற்றுக் கொண்டவர்கள் முட்டாள்கள் என்றாவது, இந்து மதத்திலிருந்து வேறு மதத்திற்கு பாய்ந்தவர்கள் முட்டாள்கள் என்றாவது, பாயாதிருக்கும் மற்றவர்கள் முட்டாள்கள் என்றாவது ஏற்படாதா?

இன்னும் இந்துவாயிருந்து கிறிஸ்தவராகி, அந்தக் கிறிஸ்தவ மதத்திலும் கிறிஸ்தவ கொள்கைக்கு விரோதமாய் நடக்கச் சொல்லுவதை அநேகர் கண்டிக்கிறார்கள். கிறிஸ்து கொள்கைக்கு விரோதமாய் நடக்கச் சொல்லுகிறவர்கட்கு வழிகாட்டியாயிருந்த முன்னோர்களாவது, மற்றும் கிறிஸ்துவ மதத்தில் நான் சேர்ந்தவன் என்று சொல்லிக் கொண்டு இந்துக்களுக்குள்ள சடங்கு நடையுடைகளையே வைத்துக் கொண்டிருந்த தம் பிள்ளைகளையும் அப்படியே பழக்கிய - முன்னோர்களாவது மூடர்களாகத் தானே இருந்திருக்க வேண்டும். அதிகமாய் வளர்த்துவதில் பயனொன்றுமில்லை. இந்தியாவின் ஆரம்ப நிலையையும் இன்றைய நிலையையும் ஊன்றிக் கவனிக்கட்டும். இடையில் எவ்வளவு ஆயிரம் ஆண்டுகள் ஆயின என்பதை எண்ணட்டும். இந்தியா எப்போதாவது அந்நியருடைய எதிர்ப்பிலிருந்து தப்பித்ததுண்டா என்பதையும் கருதட்