டும். இந்நாட்டு நாகரிகம், செல்வம், காலரீதியில் வளர்ச்சியடைந்துள்ள விதத்திற்கு மற்ற நாடுகளையும் ஒத்துப் பார்க்கட்டும். அப்போது தெரியும். நம் முன்னோர்கள் வாழ்க்கை முறை. அப்போது தெரியும் நம் முன்னோர்களின் உயர்ந்த நோக்கங்கள். அப்போது தெரியும், நம் முன்னோர்களின் சிறந்த புத்திசாலித்தனம். அன்றியும் இந்திய மக்களின் இன்றைய நிலை என்ன? கிடுகிடுவென்று வாழ்கின்றார்களா? ஜாதி, மதம் ஆகியவற்றில் உள்ள வெறி, முட்டாள்தனமான பழக்க வழக்கங்களில் ஒரு குரங்குப் பிடி, இவைகளால் சமூகம் அல்லோலகல்லோலப் படவில்லையா? மறதியாலும் அசதியாலும் இந்த இழிவான நிலை, சென்ற திங்கட்கிழமையில் ஏற்பட்டதா? இதே நிலை ஆயிரக்கணக்கான ஆண்டுகளாய் ஒரு நாட்டில் வளர்ந்தபடி இருந்தால் நமது அம் முன்னோர்களைப் புத்திசாலிகள் என்று சொல்லிவிடுவதால் எந்தப் பக்கத்தில் தித்திப்பு ஏற்பட்டு விடும்? அடிமுட்டாள்கள் என்றால் எந்தப் பக்கத்தில் மூளியாகி விடும்? நம் முன்னோர்களை அதே முன்னோர்களின் முட்டாள் தனத்தின்படி சொல்ல வேண்டிய முறையைக் கவனித்தால் வேடிக்கைதான். ஒருவகையார் சுப்பிரமணியருக்குச் சொந்தக்காரர். இன்னொரு சாரார் சிவபரம்பரை. இன்னொரு சாரார் அக்கினி பரம்பரை. ஒவ்வொரு சார்பினரும் அற்பமன்று. கடவுள் அவதாரங்களின் நெருங்கிய உறவினரே. இந்த உயர்வுகளில் குறைவு காரியத்தில் மாத்திரம் ஒன்றும் காணப்படவில்லை. வயிற்றுப் பசிக்காரன் தன் நிலைக்குப் பரிகாரம் தேடவும் வகையின்றி பிச்சையெடுக்கும் போதுதான் ஒரு காரைக்காட்டு வேளாளர் அல்லது இன்ன பரம்பரைத் தம்பிரான் சுவாமிகளின் பேரன் என்று சொல்லிக் கொள்ள வழியுண்டாக்கப்பட்டது தவிர அப்போதாவது தான் பிச்சைக்காரனானதற்குக் காரணம் தேட, “முன்னோர் புகழ்” உபயோகப்படவில்லை. 6-4-1931 பக்: 17-18 (I.J) புதுவை முரசு, |