பக்கம் எண் :

69

நமது முன்னோர், அந்தக் காலத்தின் நன்மைக்கு ஒத்தது போல் நடந்தார்கள். அது அந்தக் காலத்தில் அறிவுள்ள செயலாய்த்தானே எண்ணப்பட்டிருக்கும் என்றால் அதே அறிவுள்ள செயல் அதே காலத்தோடு தீர்ந்து போகாமல் இக்காலத்திற்கும் அதையே அனைவரும் பின்பற்ற வேண்டும் என்னும்போது சபிக்கப்படும் அல்லவா? காலம் மாறுதல் அடைவதை நோக்கினால் அவ்வக் காலத்து மக்களின் அறிவு நடத்தைகள் மறுவருடமே பிரயோசனப்படாமல் போகின்றன. பழைய அறிவு நடத்தையையே பிரயோஜனப் படுத்திக் கொள்ளவேண்டும் என்றால் அடடே அது முன்னோர் வழியாயிற்றே என்று சொல்லும்போது அம்முன்னோர் வழி இப்போது பயனில்லை என்பதைக் கூறினால் சுயமரியாதைக்காரர் முன்னோர்களில் ஒருவர் தவறாமல் அனைவரும் மூடர்கள் என்கிறார்கள் என்று சொல்வதால் ஒரு பெரிய காரியத்தில் பரிந்து கொண்டு பேசிவிட்டதாகிவிடாது.

நமது காலத்திலுள்ள இந்தத் தலைமுறையைப் பற்றிக் கவனிப்போம். நமது நடை, உடை, நாகரிகம், நாம் நமது சமூகச் சட்டங்களை அனுசரிக்கும் முறை இவைகளில் நாம் பழையவைகளாயிருப்பவைகளைத் தள்ளிவைத்திருப்பதுண்டு. புதியவைகளாய் சிலவற்றை ஆதரித்து வருவதுண்டு. ஆனால் நாம் அனுசரித்து வருவதையே நாம் வாயாற் கண்டித்து வருவதும் உண்டு. நாம் நிராகரித்து வருவதையும் நாம் வாயால் மாத்திரம் வேண்டும் என்பதுண்டு. நாம் நமது ஜீவனத்தின் நன்மைக்காக அனுசரித்துள்ள முறைகளை நாம் நமது பிள்ளைகட்குப் பிற்காலத்திற்காக - உருவாக்கி வைக்க மறுக்கிறோம். நாமே ஒரு சந்தர்ப்பத்தில் ஆதி திராவிடரை நமது சமூகத்தின் பொதுக் காரியத்தில் கொள்ளுகிறோம். வாயால் தள்ளுகிறோம். நமது பிள்ளைக்கும் பறையன் என்றுதான் சொல்லி வைக்கிறோம். நம் பிள்ளை பெரியவனாகிப் பறையனும் மனிதனே என்று நினைத்து மனமொழி மெய்களால் ஒத்துப் போகும்போது அதற்குக் குறுக்கில் கிடந்த