பக்கம் எண் :

74

‘மதம் வேண்டாம்; ஜாதி வேண்டாம்’ என்று தென்னாட்டான் போய் முகவாய்க் கட்டையைப் பிடித்துக் கொள்ளும் முன்பே - காந்தி கோஷ்டி சுயமரியாதை முழங்கவில்லையா? சுபாஷ் சந்திரபோஸ் மதம் வேண்டாம் ஜாதி வேண்டாம் என்றதாக ஆஸ்திக அன்பர் அழுவதால் பயனில்லை; தேச சேவையில் ஆவேசத்தின் இயற்கை சுயமரியாதையே !

ஆகையால்தான் சுயமரியாதைக் கொள்கை எங்கள் அப்பன் வீட்டுச் சொத்தல்ல; எல்லாருடைய சொத்து; பின் சந்ததிக்கும் அழியாத சொத்து ; சேரவாரும் செகத்தீரே என்கிறோம்!

- புதுவை முரசு, 13.4.1931, பக்கம்: 10-11

*