பக்கம் எண் :

79

வர் அதைக் கண்டறியும் திறனிழந்து விடுவதால் நாட்டுக்கு மிக்க தீமை உண்டாகிறது.

அறிவு மிக்கவர் என்றும் தேசபக்தி நிறைந்தவர் என்றும் கருதி நாட்டினர் போற்றி வந்த மக்கள், ‘தேசம் தேசம்’ என்று கூச்சலிட்டும், என் தேசம் என் உயிர் என்று பகட்டிக் கொண்டும் என் நாட்டின் உயர்வுக்காக நான் உடல் பொருள் ஆவி மூன்றையும் தத்தம் பண்ணியிருக்கிறேன் என்று முழக்கியும் கிடந்து ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் தமக்குள்ள மதகுருக்கள் என்பவரையோ தமக்குள் மதத்தையோ யாராவது குறை கூறிவிட்டால் தேசபக்தி பறக்கிறது. அறிவுடைமை அறிவின்மையாக மாறுகிறது. இது என்ன அற்பபுத்தி என்பது?

தேசம் பிரதானமா? மதம் பிரதானமா? என்ற கேள்விகட்கு மதம் பிரதானம் என்று சொல்லும் பெரியோரால் ஒருபோதும் இந்நாடு முற்போக்கடையாது. தேசத்தை நன்னிலைக்கு கொண்டுவர எத்தனையோ உயர் குணங்கள் வேண்டும். ஆயினும் மதவெறி என்னும் ஒரே தீக் குணத்தால் தேசத்தைக் கருதிச் செய்த காரியம் அனைத்தும் கெடும்.

நமது சுயமரியாதைக் கொள்கைகள் தென்னாட்டிலும் மற்றும் தமிழர் வாழும் நிலங்களிலும் இவ்வாறு பரவி இருப்பதற்கு நான் ஒரே காரணம் சொல்லுகிறேன். அறிவுத் தெளிவும், நெஞ்சுறுதியும், அன்புள்ளமும் உள்ள தேசபக்தப் பெரியார்கள் அநேகர் சுயமரியாதையின் உண்மை நலன்களை அறிந்து அதுபற்றி மக்களிடம் முழக்கம் செய்யுமுன் வந்ததே யாகும்.

ஒரு மனிதன் ஜனத்தலைவனாகவோ, பொது மக்களுக்கு உழைப்பவனாகவோ, தன்னை ஆக்கிக் கொள்ளக் காரணமாயிருந்தவை அவனுடைய கல்வியும், அறிவும், விடாமுயற்சியும், சமத்வபுத்தியும் பிறவுமாம். ஆனால் ஒரு பாதிரியோ அல்லது ஒரு திவசம் கொடுக்க வீட்டுக்கு வரும் ஐயரோ, மற்றும் மதத் தலைவரோ ஒரு மனிதனைக்