பக்கம் எண் :

80

கீர்த்தியுள்ளவனாக்கவில்லை. எந்த வழியில் ஒரு மனிதனுக்குக் கீர்த்தி ஏற்பட்டதோ அதைவிட்டு அக்கீர்த்தியை அறிவற்ற விதமாய், மதம், மதகுருக்கள் என்ற அற்ப காரணத்துக்காக உபயோகிக்க நினைப்பது விவேகமாகாது. பொதுமக்கள்பால் நன்றி செலுத்தியதாகாது, பெருந்தன்மையாகாது. நடப்பதைக் கவனியுங்கள். திரு. காந்தியவர்களின் போராட்டத்தில் மிக்க கவலையோடு உழைத்து வந்த ஜோஸப் முதலியவர்களும் புதுவையில் கத்தோலிக்கர் சிலரும் தம் தம் தேசக் கொள்கையைவிட மதக்கொள்கை பிரதானமென்று கருதி நடந்து வருகிறார்கள்.

- புதுவை முரசு, 4-5-1931

*