19 மானுடம் போற்று!
உன் தாய் தந்தையரின் சேர்க்கையால் ஏற்பட்ட கரு வளர்ந்தது. நீ உன் தாய் வயிற்றில் கருவடைந்தாய். மருத்துவச்சி, பிற பெண்டிர்கள் உதவியால் நீ குழந்தையாக வெளிப்பட்டாய். தாய் காத்து வந்தாள். பிள்ளைப் பருவத்தில் நோய்கள் அடைந்தாய். வைத்தியர் சிகிச்சை செய்தனர். 6 வயது அடைந்தாய். கல்விச்சாலை சென்றாய். ஆசிரியர் பேருதவி பெற்றாய். நீ சுறுசுறுப்போடு வேலை செய்தாய். சசுபாடிகள், ஆசிரியர்களிடம் தக்கபடி நடந்து கொண்டாய். அவர்களால் பெறத்தக்கன பெற்றாய். பரீக்ஷையில் தேர்ச்சியடைந்தாய். பிறகு உன் அறிவையும், முயற்சியையும் நன்கு உபயோகித்தாய். ஒவ்வொரு நிமிஷத்திலும் இவ்வுலகியலோடு உன்னை ஒத்திட்டுப் பார்த்துப் பார்த்து வெகு ஜாக்ரதையாக நடந்து கொண்டாய். நினைத்துப்பார். நீ உன் தந்தையராலும், ஆசிரியராலும், வைத்தியராலும், பிற மனிதர்களாலும் அடைந்த நலன்களை விடாது யோசி. நீயும் ஓயாதுழைத்ததையும் உனக்கு அவ்வப்போது தீமை செய்யக் காத்திருந்த மனிதர்களிடம் - காட்டு முட்களிடம் பட்டுக் கொள்ளாமல் முன்னுக்கு வந்ததையும் வரிசையாய் எண்ணிப்பார். சுருக்கமாய்க் கூறுவதைக் கேள்:- மனிதனாகப் பிறந்தாய். மனிதரால் சகாயம் பெற்றாய். மனித அறிவு |