பக்கம் எண் :

83

எந்த இடத்தில் எவ்வித நன்மைக்குக் கடவுள் காரணமாயிருந்தார் என்பதை நீ விளக்கிக் காட்ட முடியுமா? மனிதரால் வந்தாய், மனிதரால் வளர்ந்தாய். மனிதரால் பற்பல உதவி பெற்றாய். மேலும் உனது மனிதத் தன்மையை நீ நன்றாயுபயோகித்து நலன் எய்தினாய். கண்ணை மூடிக் கொண்டுஉன் உயர்நிலைக்கும் தாழ்நிலைக்கும் கடவுள் காரணம் என்றால் மானுஷீகம் பொய் என்கிறாயா? உன் கண்ணில், உன் அனுபவத்தில் உன் அறிவில் தெரியும் மானுஷீகம் பொய்யா? உன் கண்ணில் உன் அனுபவத்தில் உன் அறிவில் தெரியாத கடவுள் தானா அனைத்துக்கும் காரணம்? என்ன வேடிக்கை?

அதையாகிலும் நிச்சயமாய் நம்புகிறாயா? தெரியாத கடவுளை அனைத்துக்கும் காரணம் என்று நீ சொல்லுகிறாய். நம்புகிறாயா? அப்படியானால் அனைத்துக்கும் காரணம் கடவுள் என்று நீ சும்மா இருப்பதில்லை. மாலைச் சாப்பாட்டுக்கு அரிசியில்லையென்று தெரிந்தால் உன்னை உன்னிடமுள்ள மானுஷீகத்தை, என்ன துரிதமாய் அரிசி பெறும் வகையில் செலுத்துகிறாய். சும்மா இருக்கவில்லை. அந்த நிலையில் நீ, கடவுள் எல்லாவற்றிற்கும் காரணம் என்பதை நம்பாதது சரியே! சந்தேகம் வேண்டாம். அது போலவே எந்த இடத்திலும் நம்பு. மனிதரை நம்பு! மனிதரை மதி! மனிதக் கூட்டத்துக்கு நன்றி செலுத்து.

நீ பார்க்கும் எந்த மக்கட் சமூகத்திலாவது மேன்மை இருப்பதை நீ கண்டால் அதே சமூகத்தில் மானிடம் போற்றும் குணம் இருந்தே தீரும்.

விளங்கும்படி கேள்; உன் பொத்தானில் வளையம் வீழ்ந்து போனாலும் நீ நாலணா அதிகம் சம்பாதித்தாலும் அதாவது லாபத்திலும் நஷ்டத்திலும் கடவுளையே இழுத்துப் போட்டு யோசனை செய்யும்படி உன்னை ஆக்கியவர்கள் யார்? அதுபோலவே உன் பெற்றோரை உன் பாட்டன்மார்களை ஆக்கியவர் யார்? கடவுளின் தரகர் பாபத்தைப் போக்குவதாய்ச் சொல்லும் திருடர், நயவஞ்