சகர் அவர்களை நீ ஊன்றி நோக்கு! அவர்கள் சோம்பேறிகள். நீ வருந்தியுழைத்ததைப் பிடுங்க நினைப்பவர்கள் வார்த்தையை நம்பாதே. பிறர் தாக்ஷண்யத்திற்காக அன்றிச் சுதந்திர புருஷனாக யோசி. உன் யோசனையிற் பட்டதைத் தைரியத்துடன் காரியத்தில் கொண்டுவா. அப்போது உன்செயல் எப்படி இருக்கும் தெரியுமா? நீ மனிதரை உயர்வு செய்யும் மனிதனாவாய். மானுஷீகத்தை உயர்வுபடுத்தி அதன்பால் நன்றி செலுத்தும் மேன்மகனாக விளங்குவாய். - புதுவை முரசு, 18-5-1931 * |