பக்கம் எண் :

85

20
புதுவையில் பெருங்காற்று!


(கிண்டற்காரன்)

13-5-1931. இரவு 11-30மணி சுமாருக்கு வாயுபகவானுக்குக் கோபம் துவங்கிற்று. இதுபோலவே சென்ற ஆண்டிலும் ஒருமுறை கோபித்தான். 1916-ல் பெருங்கோபம். அது மகா பெரியது. அதை நோக்க நேற்றடித்த காற்றின் வேகத்தை வாயுபகவான்முதல் முறை குடித்த குடியன் பல்லை நறநறவென்று கடித்தான் என்று சொல்லத் தகும்.

1916-ம் சரி, சென்ற ஆண்டிலும் சரி, நேற்றும் சரி, வாயுபகவான் கோபித்த செய்தி வாயுபகவான் அன்பர்கட்கு முன்னதாகத் தெரிவிக்கவில்லை. வாயுபகவான் அருள் பெற்றவர்கள், தாமாகவே முன்னரே அறிந்து கொள்ளவும் கூடுமாயில்லை.

மேலும் இந்த வாயு பகவானைத் தொடர்ந்து தோன்றிய வருண பகவானாவது முன்னெச்சரிக்கை செய்ததுண்டா? இந்த வருண பகவான் வருவதற்கு முன் இந்திரன் ரதம் செலுத்தியதால் ஏற்பட்ட இடி முழக்கமும், மற்றும் மின்னலும் உண்டாகுமென்று இந்திரன் தனது அன்பர்கட்குத் தெரிவித்ததுண்டா? இந்திரன்தான் சொல்லவில்லை. அன்பர்களாவது முன்னறிந்து சொன்னதுண்டா?

அவ்வளவு வர்மமா? வாயு பகவான், வருண பகவான், இந்திரன், இவர்கள் இந்து மதத்தவர்கள்பால் பெற்று வரும் பூசனை கொஞ்சமா? வேதம் என்னும்