பக்கம் எண் :

86

மகோந்நத நூலின் உச்சியிலிருந்து கொண்டு இந்துக்களின் வாழ்வு தமக்காக என்று சொல்லுகிறார்கள் அல்லவா, இக்கடவுளர்கள்! நிகழப் போகும் உற்பாதத்தை முன்னே உணர்த்த இக்கடவுளர்கட்கு எண்ணமில்லையானால், மக்களிடம் பூசனை பெறுவதில் அக்கடவுள்களுக்கு வெட்கமில்லை யென்றுதான் சொல்லவேண்டும்.

நாம் பூசனை புரிகிறோம் மேற்படி கடவுள்கள் பூசனை பெற்றுக் கொண்டதாய்க் கேள்விப்படுகிறோம். இவைகள் கடவுள்கள் என்பதற்கு நாம் அடையாளம் கண்டதில்லை. மேலும் பூசனை பெற்றதாயுள்ள கடவுள் உற்பாதத்தை நமக்குத் தெரிவிப்பதன் மூலம் அவை நம்மிடம் நன்றி செலுத்தும்; அருள் கொள்ளும்; ஒரு மண்ணாங்கட்டியும் இல்லை. நிற்க, இந்திரன், வருணன், வாயு ஆகிய தேவர்கள் பேரால் மக்களிடம் பணம் தண்டுவதோடு, இத்தேவர்களைச் சொல்லியே தம்மை உயர்வுபடுத்திக் கொண்டு வந்த வேதியர், மற்றும் மக்கட்கு ஏற்படும் தீமைகளைக் கடவுளிடம் விண்ணப்பத்தின் மூலம் தெரிவித்து நன்மை வாங்கித் தரும் மற்ற குருக்கள், அர்ச்சகர், அடியார்கள் அனைவரும் மேற்படி இந்திராதியரால் பெருங்காற்று, பெருமழை, பேரிடி முதலிய உற்பாதத்தை முன்னறிந்து சொல்லலாகாதா? சொன்னால் போதாது. உற்பாதம் உண்டாக்கும் இந்திராதியரை வேண்டாம் என்று தடுக்கலாகாதா?

பகுத்தறிவுக்காரர்கள் இயற்கையால் உண்டாகும் நன்மை தீமைகள் கடவுளால் உண்டாவதாய்ச் சொன்னால் நம்பக் கூடாது என்கிறார்கள். நம்புவதாயினும் காசைப் பறி கொடுக்காதே என்கிறார்கள்.

நேற்றுக் காற்றடித்தது. மக்களை அச்சுறுத்தியது. சிறிது சேதம் உண்டாக்கிற்று. மழை யடித்தது, இடி இடித்தது. சேதமில்லை. மழையால் நன்மைதான். கடவுள் செய்தி இதில் ஒன்றுமில்லை என்று தோன்றுகிறது.

ஆயினும், வெள்ளைக்காரன் செய்து வைத்துள்ள யந்திரங்கள், இவைகள் நிகழப் போவதை முன்னால்