பக்கம் எண் :

9

வெளிவந்துள்ளது. (பக். 6-8). அக்கதை பாரதிதாசனின் கதைகள் என்ற நூலிலும் இடம் பெற்றுள்ளது. (பக். 14-21)

(இ) ‘படைவீரன்’ என்ற பெயரிலும், பாரதிதாசன் புதுவை முரசில் எழுதியுள்ளார். சான்றாகப் ‘படைவீரன்’ எழுதிய படைவீடு என்ற சிறுகதை புதுவை முரசில் 10.11.30இல் வெளிவந்துள்ளது. (ப-13)இக்கதை ‘பாரதிதாசனின் கதைகள்’ என்ற நூலில் ‘பயன்கிண்டல்’ என்ற பகுதியில் சேர்க்கப்பட்டுள்ளது (ப. 85; 102)

(ஈ) I.J.என்ற பெயரில் பாரதிதாசன் புதுவை முரசில் எழுதியுள்ளார். (16-3-1931; ப-15)அவர் எழுதிய ‘கதம்பம்’ என்ற பகுதியில் உள்ள சில துணுக்குகள் ‘பாரதிதாசனின் கதைகள்’ என்ற நூலில் ‘பயன்கிண்டல்’ என்ற பகுதியில் இடம் பெற்றுள்ளன. (பக். 113-114)

மறைந்திருந்த பாரதி இலக்கியத்தைத் தேடியும் தொகுத்தும் பதிப்பித்தும் தந்த சான்றோர்கள் சிலர். பெ. தூரன், ரா.அ. பத்மநாபன், சீனி. விசுவநாதன் ஆகியோர் தங்களுடைய கடுமையான உழைப்பால் பாரதி இலக்கியத்தை இயன்ற அளவு சிதையாமல் தொகுத்துத் தந்துள்ளனர். பாரதிதாசன் இலக்கியத்தைத் தொகுப்பதற்கும் அவர்களைப் போன்று ஒரு சிலரேனும் முனைந்து செயல்பட வேண்டும். நம் கண்முன்னே வாழ்ந்து மறைந்த பாரதிதாசன் படைப்புகள் கவனிப்பாரற்றுச் சிதைந்து வருவதால் உடனடியாக இம்முயற்சியை மேற்கொள்ள வேண்டும். பாரதிதாசன் அன்பர்களும் பாவேந்தர் இல்லத்தாரும் மேற்குறித்த முயற்சியில் முழுமையான ஒத்துழைப்பை நல்குதல் பாரதிதாசனுக்கு ஆற்றும் நன்றிக் கடனாகும். பாவலர் தா. கோவேந்தனோடும் என்னோடும் இத்தொகுப்பு முயற்சி முற்றுப் பெறாது பல்கிப் பெருகுதல் வேண்டும்.