அவ்வளவுதான்! அதே நிமிஷத்தில் கிராமபோன் விஷயத்தில் எனக்கு இருந்த பிரேமை என்னை விட்டுத் தொலைந்தது! ஒரு விநாடியையும் நான் இப்போது கிராமபோன் நினைப்பில் செலவிடவில்லை. இதனால் நான் சொல்ல வந்தது என்னவெனில் ஒரு விஷயத்தைப் பற்றிய பிரஸ்தாபம் அதிகமாய் இருப்பதாயும் அந்த விஷயத்தைப் பற்றிய உண்மையை நாம் சிறிதும் அறியவில்லையென்றும் வைத்துக் கொள்வோம். அந்த நிலையில் அவ்விஷயத்தில் நமக்குப் பிரேமை அதிகம் இருக்கும். அவ்விஷயத்தைப் பற்றிய பிரஸ்தாபம் தீர்ந்து விடுகிறது என்பதாம். தற்காலம் மனிதர்களிடம் அதிக பிரஸ்தாபத்தில் இருக்கும் விஷயம் எது? அதுதான் கடவுள். இக் கடவுட் பிரஸ்தாபம் எவ்வளவு காலமாயிருந்து வருகிறது. எவ்வளவு பேரால் பிரஸ்தாபிக்கப்படுகிறது என்பதை யோசித்தால் கடவுளைப் பற்றிய உண்மை இன்று வரைக்கும் ஒருவரும் அறிந்ததில்லை என்பது புலனாகிறது. இக்கடவுள் பிரஸ்தாபம் நீங்கி மனிதர்கள் நல்ல நிலைமை அடைய வேண்டுமானால் கடவுள் உண்மையை அறிந்தாக வேண்டும். கிராமபோன் விஷயத்தைத் தெரிந்து கொள்ளும் அத்தனை சுலபமாகக் கடவுள் உண்மையை அறிய முடிந்தால் வெகு நாளைக்கு முன்பே அதை அறிந்திருக்கலாம். ஒரு சந்தேகம். கடவுளைக் கண்டவர்கள் பேசும் சிலர் எப்போது பார்த்தாலும் கடவுளைப் பற்றியே பிரஸ்தாபித்துக் கொண்டிருப்பது எதற்காக? கடவுளைக் கண்டவர்கள் போல் பலர் கடவுளைப் பற்றிய கதைகளையே சதா கேட்டவண்ணமாயிருப்பது எதற்கு? இன்று வரைக்கும் கடவுளைப் பற்றிக் கூறிக் கொண்டுவந்த ‘மாதிரிகள்’ அனைத்தும் கடவுளுக்குப் பொருத்தமானவையாக இருந்திருந்தால் கடவுள் உண்மை |