தெரிந்து போயிருக்கும். கடவுளுண்மை இன்று வரைக்கும் தெரியாமலிருப்பதால் மாதிரிகள் அனைத்தும் பிதற்றல்கள் என்றும் மனிதரை ஏமாற்ற என்றும் முடிந்தது. ஐயோ பாபம்! கொலை, களவு, கள், காமம், வியபிசாரம் முதலியவைகள் அனைத்தும் ராஜாங்கமாக நடைபெறக் காரணமாயிருக்கும். கடவுள் பிரஸ்தாபம் நீங்க வேண்டும். அக் கடவுளாவது மனிதர் முன் ஓடி வந்து ‘நான்தான் கடவுள்! என்னைப் பற்றிய பிரஸ்தாபத்தின் மூலம் உங்கள் வாழ்க்கையில் குளறுபடி இல்லாமல் ஒழுங்கு படுங்கள்’ என்று சொல்லியிருக்கலாகாதா? இப்படிச் சொல்லாமலும் நம்மால் அறிய முடியாமலும் இருக்கும் கடவுளைப் பற்றி நாமாவது கவலை கொள்ளாதிருக்கலாகாதா? என் பிரேமை - என் பைத்தியம், நீங்கியதற்குக் கிராமபோன் விஷயத்தை நான் அறிந்து கொண்டதுதான் காரணம். கடவுள் பேரைச் சதா மக்கள் சொல்லிக் கொண்டிருக்கக் காரணம் என்ன? கடவுள் கிராமபோன் அல்ல என்பதாகும். - புதுவை முரசு, 25-5-1931 * |