பக்கம் எண் :

93

பற்றிச் சொல்ல வரவில்லை. மனச்சான்று சிறிதும் இல்லாதவர்கள் காரணமின்றி மக்கள் பணத்தை ஒப்புக் கொள்ளுவார்கள். இதுபற்றி சொல்ல வரவில்லை. உங்கள் வீட்டு முட்டுக்கட்டை முந்தானையில் ஆய்ந்து பணம் முடிந்திருக்குமா என்ற கதைபோல் வலிய அழைத்து அய்யருக்குக் கொடுக்கப்படுகிறது. இதுபற்றி நாம் இங்கு கூற வரவில்லை.

அய்யரை அழைப்பதும், தட்சணை கொடுப்பதுமான சந்தர்ப்பம் மனித வாழ்க்கையில் எப்பொழுதும் நடைபெற்று வருகிறதே! இதனால் பாபம் நீங்குகிறது; புண்ணியம் சுரக்கிறதுமாக இருக்கிறது. ஆனால் அய்யரை அழைப்பதையும் பணம் கொடுப்பதையும் நிறுத்தவும் கூடாது என்று தெரிகிறதே! இது மெய்தானா என்று உன்னைக் கேட்கிறேன். ஆம். மெய்தான்.

இதனால் பணக்காரர்களுக்கு மட்டுமே அடிக்கடி பார்ப்பானை அழைக்க முடியும்; ஏழைக்கு முடியாது. இந்தியாவில் பணக்காரர் மட்டு; ஏழைகள் அதிகம். ஆதலால் அய்யோ, பாவம்! பெரும்பான்மையோர் பார்ப்பானுக்குக் கொடுக்க முடியாமையால் பாவிகளாக இருக்கின்றார்கள். பணக்காரரான சில புண்ணிய சாலிகள் பார்ப்பானுக்குக் கொடுப்பதால்! நான் சொல்லியது சரிதானே! சரிதான்.

அய்யோ பாவம்! பெரும்பான்மையோர் ஏழைப் பாவிகள்! இவர்களையும் பணக்காரப் புண்ணியவான்களாக்க என்ன செய்வது? எனக்குத் தெரியாது.

இதற்கு சுயமரியாதைக்காரர்கள் ஒரு வழி சொல்லுகிறார்கள். ஏழைகளுக்கு மகவாசர்களே அநேக அசந்தர்ப்பங்களை உண்டு பண்ணியிருக்கிறீர்கள். அசந்தர்ப்பங்களை நீக்கினால் ஏழைகள் பணக்காரர்களாக முடியும்... ஆம்! ஆம்! அனைவரும் பணக்காரர்களாகிவிட்டால் எல்லாரும் பார்ப்பனர்களுக்குப் பணம் கொடுத்துப் புண்ணியவான்கள் ஆகிவிடலாம்.