போடா! போடா! பைத்தியக்காரா! எல்லாப் பணக்காரரும் அய்யருக்கு வாரிக் கொடுத்தால் அய்யர் வீட்டில் எல்லா பணமும் போய்விடும். நான் சொல்லுவதைக் கேள். எல்லாப் பணக்காரர்களும் சேர்ந்து பார்ப்பானுக்கு பணம் கொடுப்பதையே நிறுத்தி விடவேண்டும். அதனால் பார்ப்பானும் தீவிரமாக உழைத்து எல்லாரோடும் சமநிலையை அடைவான். அதன்பிறகு இந்தியாவில் ஒரே பணக்காரர் மயம். புண்ணியம் தேட வேண்டுமே! அந்த லோகத்திற்குப் போனால் கடவுள் எங்கே புண்ணியம் என்று கேட்பாரே! அப்படிக் கடவுள் கேட்டால் ‘அய்யா! கடவுளே! எங்கள் தேசத்தில் தானம் வாங்க பார்ப்பானில்லை. அதனால் புண்ணியம் தேட முடியாமல் போயிற்று. நாங்கள் எல்லோரும் பணக்காரர்கள். ஆதலால் பாவமும் நாங்கள் கட்டிக் கொண்டதில்லை. விசயம் இதுவாகையால் எங்கள் பாவ புண்ணியத்தை அளந்து கட்ட நீங்களும் அநாவிசியம் என்று சொல்லி விடலாம். இது சுயமரியாதைக்காரர் வழி! - புதுவை முரசு, 8-6-1931 * |