23 ஆஸ்திகமே அறிவைக் கெடுத்தது
நாவிதர் என்றும் வண்ணார் என்றும் இப்போது சொல்லப்படுவோர் முன்னாளில், வைத்திய சாஸ்திரிகளாக இருந்தவர்கள். அந்நாள் முதல் இந்நாள் வரைக்கும் அவர்கட்குப் பண்டிதர்கள் என்றே பெயர். அந்நாளில் அவர்கள் சத்திரம் வைத்தல் என்னும் ஆப்ரேஷன் முறையிலும் வல்லவராயிருந்தார்கள். இவர்கட்கு அக்காலத்தில் அரசர்கள் விசேஷ மான்யங்கள் விட்டு ஆதரித்து வந்தார்கள். அரச சமூகத்தில் இப்பண்டிதர்கட்கு நெருங்கிப் பழகும் சந்தர்ப்பம் அதிகமிருந்தது. இடைக் காலத்தில், ஆரியர்கள் தமிழரசர்களிடம் செல்வாக்கடைய அநுசரித்த தந்திரச் செயல்களில் முதன்மையானது இப்பண்டிதர்களை அவ்வரசர்களிடமிருந்து அறுத்துவிட்டதே யாகும். தமிழ் வைத்திய முறைகளைத் தமிழர்களாகிய இவர்களிடமே தெரிந்து கொண்டு, தெரிந்து கொண்டதையெல்லாம் தமது வேதத்தில் புகுத்தி, அதற்கு ஆயுர்வேதம் என்று பெயர் சொல்லி மேன்மைப் படுத்தினர். இவ்வகையில் நாளடைவில் தமிழ் வைத்தியர் தொழிலில் நெருக்கடி ஏற்பட்டதோடு, சத்திரம் இடுவதில் ஒரு பகுதியாகிய க்ஷவரத் தொழிலையும் துணிகளைச் சுத்தம் செய்யும் தொழிலையுமாத்திரம் உபயோகிக்கும் நிலைமை ஏற்பட்டது. என்றைக்கு வைத்திய சாஸ்திரமானது கடவுள் சொன்னதாகச் சொல்லப்படும் வேதத்தில் இடம் பெற்றுவிட்டதோ, அன்று முதலே அது விருத்தியடையாத நிலையை அடைந்து விட்டது. கடவுள் சொன்ன முறையை மீறி அதன்மேல் மனிதனுடைய |