பக்கம் எண் :

96

ஆராய்ச்சியையும் செலுத்த எவருக்கும் துணிவு ஏற்பட ஞாயமில்லை. இதனால் வைத்திய ஞானத்தை ஆஸ்திகச் செயல் அமிழ்த்தியதென்றால் அது மறுக்க முடியாததேயாகும்.

பண்டைக் காலத்தில் சிற்பத் தொழிலானது இந்தியாவில் மிக நல்ல நிலையில் இருந்தது. சிற்ப சாஸ்திரிகட்கு அரச சமூகங்களில் மிக்க செல்வாக்கிருந்தது. அரசர்களே நல்லபடி ஆதரித்து வந்தார்கள். அக்காலத்தில் அரசர்கள் ஆஸ்திக புத்தி மீறிக் கண்ட விஷயத்தையெல்லாம் கடவுள் சம்பந்தத்திலே நுழைத்தார்கள். சிற்பிகள் கோயிற்பணிகள் செய்து கிடக்கும் சந்தர்ப்பம் தங்கள் அறிவை விசாலப்படுத்தச் சந்தர்ப்ப மிருந்ததில்லை. இதுவுமன்றி அவர்கள் தங்கள் சாமர்த்தியத்தைக் கடவுள் உருவம் அமைப்பதன் மூலமாகவே அரசரை மகிழ்விக்க முடியுமென்று நம்பினார்கள். அந்நம்பிக்கை பொருத்தமான தென்பதோடு சிற்பிகட்கு அளவற்ற மதிப்பு ஏற்பட்டது. காலமோ, அரசர்கள், தரையில் மாத்திரம் இன்றி மலை கண்ட இடத்தில் கோயில் கட்டி நிரப்பும் காலமாயிருந்தது. இச்சமயத்தில் ஆரியர்கள் சிற்பிகளின் பெருங் கௌரவத்தைக் கிள்ளிப் போட எண்ணி வேதத்தில் ஒரு பகுதியை ஏற்பாடு பண்ணினார்கள். அதன்படி சிற்பிகள் கடவுட் சிலைகள் செய்தால் மட்டும் பயனில்லை; வேத மந்திரத்தால் தாங்கள் அவைகட்கு உயிர் கொடுக்க வேண்டுமென்று சொல்லிவிட்டார்கள். சித்திரக்காரருக்கும் இதே கதி நேர்ந்துவிட்டது.

சிற்பத்தைப் பற்றியும் சித்திரத்தைப் பற்றியும் வேதத்தில் சில முறைகளைப் பின்னர் ஆரியர் சேர்த்தார்கள். அம்முறைகளையே பிற்பட்ட காலத்தில் சிற்பத்திற்கும் சித்திரத்திற்கும் ஆதாரமாக்கப்பட்டது. இம்முறைகளின்படி பார்த்தால் சிற்பிகள் - சித்திரர்களின் அறிவானது தடைப்பட்டதோடு கோயில் விக்ரகங்களின் மட்டமாக நின்று போயிற்று. உலக முன்னேற்றத்திற்கு ஒரு லக்ஷம் வகைகளில் உபயோகப்பட வேண்டிய சிற்ப சித்திரங்கள் கோயி