பக்கம் எண் :

97

லுக்குள் மாத்திரம் புகுந்து கொண்டது. அந்நாள் முதல் இந்நாள் வரைக்கும் சிற்ப சித்திரங்கள் வளர்ச்சி முறையில் இருந்திருந்தால் இன்றைய வுலகில் மேற்படி கலைகளில் இந்தியா முதன்மையாயிருக்கும். இடையில் துண்டித்தது ஆஸ்திகமே.

சிற்ப சாஸ்திரிகளையும், சித்திரிகர்களையும் நாளடைவில் வில்வாளறுத்துத் தொழிலாளர் வர்க்கத்தில் சேர்த்து விட்டதும் தொழிலாளர் அனைவரும் தாழ்ந்தவர்கள் என்று ஆக்கியதும் ஆஸ்திகரே.

எந்தத் தொழிலாளர்களை மேன்மைப்படுத்தி மேன்மைப்படுத்தி அவர்களால் தேசத்தை உந்நதப்படுத்த வேண்டுமோ அந்தத் தொழிலாளர்களைத் தாழ்மைப்படுத்தித் தாழ்மைப்படுத்தி ஊருக்குப் புறம்பாகவும் வாழச் சொல்லித் தொழிலுலகைப் புராதன ஆஸ்திக இந்தியா தாழ்ந்த நிலையையே அடைந்து வந்தது.

பொருளுண்மை அறியும் அறிவும், பொது மக்கள் பால் விசேஷ அன்பும் உடைய தமிழர்களுக்கு அக்கால ஆஸ்திகமானது செய்துள்ள கெடுதிகள் சொல்லி முடியாது. இக்காலத்தில் விஞ்ஞானப் புலமையின் சாயல் அக்காலத்துச் சித்தர்களிடம் இருந்ததென்றால் அறிவுடையோர் அதை மறுக்க முடியாது. பொதுமக்களின் நன்மைக்கான படி. வஸ்து விவேகம் கொண்ட பெரியாரை அக்காலத்தில் சித்தர் என்று அழைத்து வந்தார்கள். அக்கால ஆஸ்திகர்களை - அவர்களின் பிடிவாதத்தை - கோணற்புத்தியை அவ்வப்போது பகிரங்கமாய்க் கண்டித்து வந்த சித்தர்களுக்குக் கிடைத்தது அஞ்ஞாதவாசம். அவர்கள் காடு கண்டவிடம் வாசம் செய்தபோதும் பொதுமக்கட்குப் பல உண்மைகளைச் சொல்லி வந்தார்கள். உருவ வணக்கம் வெறும் சடங்குகள் இவைகளுக்கு மாறாக அவர்கள் நல்லநெறிகளைச் சொல்லிவந்த ஒரே காரணத்தால் அவர்களின் நுட்ப