பக்கம் எண் :

சோழமண்டல சதகம்21

பெருஞ்செல்வர்கள்

உடையார் குலத்தில் பலவகையும்
          உயர்வே ளாளர் பலவகையும்
குடையார் குலத்தில் பலவகையும்
          கோனார் குலத்தில் பலவகையும்
அடைய வாயில் உடையாராய்&
          அளகே சனைப்போல் அருங்கடலின்
மடையார் செல்வம் பெரிதாக
          வளம்சேர் சோழ மண்டலமே
30

உடையார், வேளாளர், குடையார், கோனார் ஆகிய பல குடியில் பல வள்ளல்கள் குபேரனைப் போல் பெரும் செல்வம் பெற்றுச் சோழநாட்டில் வாழ்ந்தனர்.

மோட்டெருமை வாவிபுக முட்டுவரால் கன்றுஎன்று
வீட்டளவும் பால்சொரியும் வெண்ணையே நாட்டில்
அடையா நெடுங்கதவும் அஞ்சல்என்ற சொல்லும்
உடையான் சரராமன் ஊர்

என்றார் கம்பர். சரராமன் - சடையப்ப வள்ளல் - உடையார் - பார்க்கவ குலத்தினர். சுருதிமானும், மலையமானும் அவருடன் சேர்ந்தவர் ஆவர்.