பக்கம் எண் :

30சோழமண்டல சதகம்

எண்பத்து மூன்றளவும் ஈண்ட இருந்தேதான்
விண்புக்கான் தண்புகார் வேந்து

என்பது ஒரு பழம்பாடல் (பெருந்தொகை 779).

உச்சங்கோல் எண்கோல் உயரம் பதினாறுகோல்
எச்சம் பிரிவாய் இருபதுகோல் - தச்சளவு
மண்கொள்ளக் கொண்டகோல் எண்கோல் வளவர்கோன்
கண்கொள்ளக் கண்ட கரை

என்பது ஒரு பழம்பாடல் (பெருந்தொகை 2154).

கரிகாலனைப்
          பொன்னிக் கரைகண்ட பூபதி

என்று விக்கிரம சோழன் உலாவும் [13]

மண்கொண்ட பொன்னிக் கரைகட்ட வாராதான்
கண்கொண்ட சென்னிக் கரிகாலன்

என்று குலோத்துங்க சோழன் உலாவும் [18]

தொழுது மன்னரே கரைசெய் பொன்னியில்

என்று கலிங்கத்துப் பரணியும் (இராசபாரம்பரியம் 20)

ஈரருகும்
எண்கரை செய்யாது எறிதிரைக் காவிரிக்குத்
தண்கரை செய்த தராபதி

என்று சங்கர ராசேந்திர சோழன் உலாவும் [13] கூறுகின்றன.

கரைகட்ட ஈழத்திலிருந்து பிடித்து வந்த கைதிகளைப் பயன்படுத்தினான் என்பர்.

முனையதரையன்

புனையும் குழலாள் பரிந்தளித்த
          பொங்கல் அமுதும் பொரிக்கறியும்
அனைய சவுரி ராசருக்கே
          ஆம்என்று அருந்தும் ஆதரவின்
முனைய தரையன் பொங்கல்என்று
          முகுந்தற்கு ஏறு முதுகீர்த்தி