பக்கம் எண் :

சோழமண்டல சதகம்31

வனையும் பெருமை எப்போதும்
          வழங்கும் சோழ மண்டலமே
42

வீரசோழன் காலத்தில் முனையதரையன் என்னும் ஓர் அரசியல் அலுவலன் திருக்கண்ணபுரத்தில் வாழ்ந்து வந்தான். திருக்கண்ணபுரம் சௌரிராசப் பெருமான்பால் பேரன்பு பூண்டொழுகினன். கோயிற் கணிகை ஒருத்திபால் முனையதரையன் காதல் கொண்டொழுகினான். எனினும் ஆண்டவனிடத்தும், அரசரிடத்தும் தவறில்லானாய் வாழ்ந்தான். ஒருமுறை பஞ்சம் வரவே அரசனின் இறைப் பணத்தை அடியார்க்குச் செலவிட்டான். அதனால் அந்நாட்டு அமைச்சரால் சிறைப்படுத்தப்பட்டான். முனையதரையனின் காதற்கணிகை அவன் அளிக்க வேண்டிய பெரும்பொருளை அளித்தாள். அதை ஆட்கூலிக்கென்று எடுத்துக் கொண்டனர்.

கணிகை சௌவுரிராசப் பெருமாள் சந்நிதி சென்று இன்றைக்கு ஐந்தாம் நாள் என் நாதன் வராவிடில் நான் இறைவன்முன் தீப்பாய்வேன் என்றாள். இறைவன் சோழன் கனவிற் சென்று கூற முனையதரையன் விடுதலை செய்யப்பட்டுச் சீரும் சிறப்பும் பெற்றான்.

ஒருநாள் இருவரும்

பாலும் அரியும் பசும்பயறும்
          பாக மாக வேவிரவி
ஏலம் இழுதும் சருக்கரையும்
          இட்டட்டு உண்போ தில்அன்னான்
சால மதுரம் என்னஅவை
          சவுரி ராசனுக்கே தகும்

என்றனர். அர்ச்சகர் காலையில் கோயில் திறந்து பார்க்கப் பெருமாள் மேனியெங்கும் அன்னம் பரவியிருந்தது. முனையதரையன் அன்றுமுதல் அப் பாகமே செய்து இறைவனுக்கு அமுதுபடைத்தான். இன்றும் அது தொடர்கிறது. ‘முனியோதரன் பொங்கல்’ என்ற பெயரில் இரண்டாம் கால நைவேதனம் படைக்கப்படுகிறது. மக்கள் முனீசுரன் பொங்கல் என்றும் அழைப்பர்.