கருங்கண்ணி வேள் மேழிக் கொடிசேர் கருங்கண்ணி வேளாண் முகப்பு மேனியமேல் கேழில் மயிலும் உத்திரத்தில் கிளராடு அரவக் கிண்கிணிக்கால் சூழப் பணிந்த தியாகருக்குச் சொல்லும் தியாகம் சொரிந்தோங்கும் வாழ்விற் பெரியோன் குடிவாழ்வு வளம்சேர் சோழ மண்டலமே | 44 |
முன்னொரு காலத்தில் தமிழ்நாட்டின்மீது பிற மதத்தார் படையெடுத்து வந்தனர். பல கோயில்களின் தெய்வப் படிமங்கள் பாதுகாப்புக்காகப் பல இடங்களில் ஒளித்து வைக்கப்பட்டன. ஆரூர்த் தியாகேசரைக் கிழக்குப் பக்கம் உள்ள ஓரிடத்தில் மறைத்து வைத்துப் பின் கொண்டுவருங்கால் பங்குனித் திருவிழா வந்தது. |