பக்கம் எண் :

34சோழமண்டல சதகம்

கருங்கண்ணிவேள் என்ற வேளாண்குலச் செம்மல் அவ்விழாவைத் தன் இல்முன் சிறப்பாக நடத்தினான். அந்த இடம் இப்போது பெரிய திடலாக உள்ளது என்பர்.

கண்டிக்கு நெல்

தேனார் தொடையார் பரராச
          சிங்கப் பெருமான் செந்தமிழ்க்குக்
கானார் நெல்லின் மலைகோடி
          கண்டி நாடு கரைசேரக்
கூனார் கப்பல் ஆயிரத்தில்
          கொடுபோய் அளித்த கொடைத்தடக்கை
மானா கரன்சங் கரன்உடையான்
          வளம்சேர் சோழ மண்டலமே
45

இலங்கையில் கண்டிப் பகுதியைப் பரராச சிங்கன் என்னும் அரசன் ஆண்டு வந்தான். அவன் நாட்டில் பெரும் பஞ்சம் ஏற்பட்டது. அந்நாடு வாழக் கொடையளிக்குமாறு பரராச சிங்கன் சடையப்ப வள்ளலைக் கேட்டுக் கொண்டான். சங்கரன் என்பாரின் மகனாகிய சடையப்ப வள்ளல் ஆயிரம் கலங்களில் நெல் அனுப்பி இலங்கையில் ஏற்பட்ட பஞ்சத்தைப் போக்கினார்.

பரராச சிங்கன் சடையப்ப வள்ளலை

இரவுநண்பகல் ஆகில்என்பகல் இருள்அறாஇரவு ஆகில்என்
          இரவிஎண்திசை மாறில்என்கடல் ஏழும்ஏறில்என் வற்றில்என்
மரபுதங்கிய முறைமைபேணிய மன்னர்போகில்என் ஆகில்என்
          வளமைஇன்புறு சோழமண்டல வாழ்க்கைகாரணம் ஆகவே
கருதுசெம்பொனின் அம்பலத்திலோர் கடவுள்நின்று நடிக்குமே
          காவிரித்திரு நதியிலேஒரு கருணைமாமுகில் துயிலுமே
தருஉயர்ந்திடு புதுவையம்பதி தங்குமானிய சேகரன்
          சங்கரன்தரு சடையன்என்றொரு தருமதேவதை வாழ்வதே

என்று பாராட்டியுள்ளான்.

காவிரி - வேளாளர் எச்சில்

விருந்து நுகர்வோர் கைகழுவ
          விளங்கும் புனற்கா விரிஎன்றால்
தரும்தாய் அனைய புகழ்ப்புதுவைச்
          சடையன் கொடைஆர் சாற்றவல்லார்
பரிந்தார் எவர்க்கும் எப்போதும்
          பாலும் சோறும் பசிதீர