பக்கம் எண் :

40சோழமண்டல சதகம்

பாக்கம் உடையான்

ஆக்கம் மிகுந்த ஓர்புலவன்
          ஆர்ஓ லைக்கும் அடங்கான்என்று
ஊக்கம் மிகுந்த தமிழ்ப்பாட
          உரிந்து கொடுத்தான் உள்ளதெல்லாம்
பாக்கம் உடையான் எனும்வார்த்தை
          பலரும் அறிவார் அவன்வாழ்வு
வாய்க்கும் செழும்கா விரிபாயும்
          வளம்சேர் சோழ மண்டலமே
54

பாக்கம் உடையான் என்னும் ஒரு வேளாளச் செம்மல் சேவப்பன் என்னும் ஒரு கவிஞனால் நிந்தாஸ்துதியாகப் பாடப்பட்டான். அவன் புலவர் வேண்டியதைக் கொடுத்தான். சோழ நாட்டு வேளாளருள் பாக்கமுடையான் கோத்திரம் என ஒன்றுளது.

காரோலை சேவப்ப நாயக்கர் ஓலை கரிப்புக்கட்டி
நீரோலை திம்மப்ப நாயக்கர் ஓலை நிலத்தின்மற்ற
பேரோலை பாக்கம் உடையான் செவிக்குப் பிடிபடுமோ
ஆரோலைக் கும்அடங் கான்காலன் ஓலைக்கும் அப்படியே

என்பது ஒரு புலவர் பாக்கமுடையானைப் பாடிய பாடலாகும். சேவப்ப நாயக்கன் தஞ்சை நாயக்கரில் முதல் மன்னனுக்கும் பெயர்.

அநதாரி

ஏட்டில் பொலிய ஆன்பசுஒன்று
          எழுதும் கன்றாப் புடைராயன்
சீட்டுக் கவிதை அநதாரி
          செப்பும் தமிழின் திறன்அறிந்தோன்
நாட்டில் புகழ்கன் னைக்குடையான்
          நாளும் தண்டா யுதன்பெருமை
வாட்டுப் படுமோ அவன்காணி
          வளம்சேர் சோழ மண்டலமே
55

தொண்டை நாட்டு வாயல் என்னும் ஊரினரான அநதாரி கல்வி கற்கும் பொருட்டுச் சோழ நாட்டு உறத்தூரில் வாழ்ந்த அந்தணரிடம் வந்தார். அநதாரியின் கல்விப் பெருமையை அறிந்த கன்றாப்பூர் சிங்கராயன் என்பார் அநதாரியை விலைக்கு வாங்கினார்.