பக்கம் எண் :

சோழமண்டல சதகம்43

தீப்பாய்ந்த ஏழு ஊரார்

புரைதீர் அரசைப் பதிபுகுந்
          பொய்யா மொழியார் புகழ்த்தமிழ்க்கா
அரசூர் முதலா ஏழூரும்
          அழலில் புகுந்தது அரிதாமோ
தரைசூழ் மதியம் மறுவாற்றும்
          சான்றோர் அஃதாற் றார்எனும்சொல்
வரையாது உலகில் பெற்றோரும்
          வளம்சேர் சோழ மண்டலமே
58

அரசூரில் சீநக்கன் ஆதரவில் பொய்யாமொழியார் வாழ்ந்தபோது சீநக்கன் கட்டிலில் பொய்யாமொழியார் உறங்கிவிட்டார். சீநக்கன் பத்தினி அறியாமல் அக் கட்டிலிலேயே படுத்து உறங்கினள். ஊரார் அது கண்டு இகழ்ந்தனர்.

சீநக்கன் இறந்தபோது பொய்யாமொழியாரும் சிதையில் விழுந்து உயிர்விட்டார். ஏழு ஊராரும் பொய்யாமொழியைக் குறை கூறினோமே என்று தீப்பாய்ந்தனர். திருவாலங்காட்டில் தீப்பாய்ந்த எழுபது வேளாளர் வரலாறு இதனுடன் ஒப்பிடத்தக்கது.

சிற்றரசூர் பேரரசூர் தென்மாவை பூந்துருத்தி
கொற்றமலி கண்டி குருகாவூர் - இத்தனையும்
வாய்ப்பாய் அமர்ந்தருளும் மன்னுகுடி அத்தனையும்
தீப்பாய்ந்த நல்ல திறம்

என்பது பழம்பாடல். கொற்றமல்லி இப்போது கொத்தமல்லி என வழங்கப் பெறுகிறது.

அம்பர் கிழான்

நல்லம் பருமோ நல்லகுடி
          நாளும் உடைத்து சித்தன்வாழ்வு
இல்லம் தொறுமூன்று எரியுடைத்துஎன்று
          இசைத்தாள் அவ்வை ஈதேயோ
சொல்லும் பெரியோர் வாழ்வுடைத்து
          தொலையாது அளிக்கும் சோறுடைத்து
வல்லம் பெரியோர் அவையுடைத்து
          வளம்சேர் சோழ மண்டலமே
59

நல்லம்பர் நல்ல குடியுடைத்து; சித்தன்வாழ்வு
இல்லம் தொறும்மூன்று எரியுடைத்து; - நல்லரவப்
பாட்டுடைத்துச் சோமன் வழிவந்த பாண்டியநின்