காணியாளர் எல்லா விளக்கும் விளக்கல்ல இதுவே விளக்காய் முக்குளத்தின் நில்லார் அவியா விளக்குடனே நிரையாய் மூழ்கி நிலைநின்றார் பல்லார் அறுபான் நான்குகுடிப் பழையோர் கரிகால் பார்த்திபற்கே எல்லா மகுட முடிசூட்டும் வளம்சேர் சோழ மண்டலமே | 64 |
இளஞ்சேட் சென்னியின் மகன் கரிகாலன் நாடிழந்து வாழ்ந்தான். பட்டத்து யானை கரிகாலனுக்கு மாலையிட்டு உறையூருக்கு அழைத்து வந்தது. தாயத்தார் முடிசூட வந்திருப்பது கரிகாலனோ எனச் சந்தேகித்தனர். கரிகாலன் அரசுரிமை உடையவன் ஆயின் அவனுக்குப் பட்டங்கட்ட உரிமையுடையோர் தலையில் விளக்கை வைத்து ஆன்நெய் வார்த்துத் தாமரை நூலிட்டு ஏற்றிய விளக்குடனே திருவெண்காட்டில் உள்ள முக்குளத்தில் மூழ்கி விளக்கு அணையாது எழவேண்டும் என்று கூறினர். அவ்விதமே 64 காணியாளர்களும் மூழ்கி எழுந்தனர். இன்றும் காணியாளர் வீட்டுத் தாலாட்டுப் பாடல்களில், முன்னாள் முக்குளத்தில் மூழ்கிக் கரையேறி மண்ணாளும் சோழனுக்கு மகுட முடிசூட்டி என்று பாடுகின்றனர். 64 பெயர்களும 64 கோத்திரங்களாக விளங்குகின்றன. நாங்கூர் அதிபன் சேந்தன் தேங்கூர் இதழிச் சடைக்காடர் திருவெண் காடர் திருவருளால் ஆங்கூர் மலர்க்கைத் தளைதனையும் ஆசைத் தளையும் அறவிடுத்த நாங்கூர் அதிபன் சேந்தபிரான் நலங்கூர் அவனி நாடாண்மை வாங்கூர் பெருமை நெடுந்தோற்றம் வளம்சேர் சோழ மண்டலமே | 65 |
உரிய வரிசெலுத்தாததற்காகச் சோழ மன்னன் நாங்கூரைச் சேர்ந்த சேந்தன் என்பாருக்குக் கைவிலங்கிட்டான். இறையருளால் பட்டினத்தார் நாங்கூர்ச் சேந்தனின் கைத்தளையைப் போக்கினார். மத்தளை தயிருண் டானும் மலர்மிசை அயனும் தேடி பித்தளை கின்ற போது பிரானடிக்கு அன்பு வைத்து செய்த்தளை வயலூர் நாங்கூர் சேந்தனை வேந்தன் இட்ட கைத்தளை நீக்கி இங்கே காட்டுவென் காட்டு ளானே என்பது பட்டினத்தார் பாட்டாகும். நாங்கூர்கிழான் என்று சோழிய வேளாளரில் ஒரு பிரிவினர் உள்ளனர். நாங்கூர் மிகத் தொன்மையான ஊர். கிழக்காசிய நாட்டுக் கல்வெட்டொன்றில் நாங்கூர் குறிக்கப்படுகிறது. நாங்கூர் நாடு என்பது சோழ மண்டலத்தின் ஒரு பகுதியாகும். சத்திமுற்றப் புலவர் நினையும் கழற்கால் சிலம்பலம்ப நின்ற பெருமான் நிலைபாடிப் பனையின் கிழங்கு பிளந்ததெனப் பவளக் கூர்வாய் நாரையென்றே புனையும் முதல்நூல் சத்திமுற்றப் புலவன் அமுது புசித்தூற வனையு மதுரத் தமிழ்வாடை | |
|