தாராசுரத்திற்கு அருகில் உள்ள திருச்சத்திமுற்றத்தில் ஒரு புலவர் வாழ்ந்து வந்தார். வறுமையில் வாடிய அவர் பாண்டியன்பால் பரிசு பெற மதுரை சென்றார். வைகைக் கரையில் தங்கியவர் குளிரில் வாடிய நிலையில் அருகில் இருந்த நாரையைப் பார்த்துத் தன் மனைவிக்குத் தூது விடுவதாக ஓர் அகவலைப் பாடினார். நாரையின் மூக்குக்குப் பிளந்த பனங்கிழங்கை உவமையாகக் கூறியிருந்தார் புலவர். நாரையின் மூக்குக்கு நெடுநாள் உவமை காணாது தவித்த பாண்டிய மன்னன் மாறு வேடத்தில் நகர்சோதனை வருகையில் இப்பாடலைக் கேட்டு மகிழ்ந்தான். தன் போர்வையைப் போர்த்துச் சென்றான். மறுநாட் காலை அழைத்துப் பரிசில் வழங்கினான். நாராய் நாராய் செங்கால் நாராய் பழம்படு பனையின் கிழங்கு பிளந்தன்ன பவளக் கூர்வாய்ச் செங்கால் நாராய் நீயும்நின் மனைவியும் தென்திசைக் குமரியாடி வடதிசைக்கு ஏகுவீர் ஆயின் அப்போது எம்மூர்ச் சத்தி முற்றம் அவ்வூர்க் காவினுள் புகுந்து வாவியுள் தங்கி நனைசுவர்க் கூரை கனைகுரல் பல்லி வரவுபார்த் திருக்கும்எம் மனைவியை நோக்கி உன்கோ மாறன் வழுதி கூடலில் |