பக்கம் எண் :

56சோழமண்டல சதகம்

திருத்தொண்டத் தொகை

தரைமேல் நாவ லூர்இறைவன்
          தடுத்தாட் கொண்ட தற்பரனைக்
கரைசேர் பித்தா எனஓதிக்
          காட்டும் பவளக் கனிவாயான்
உரைசூழ் திருத்தொண் டத்தொகையின்
          நெருங்கும் அடியார் உடன்நிகழ்த்த
வரையாது அளித்த கொடைவேளாண்
          மரபோர் சோழ மண்டலமே
78

சுந்தரரைச் சிவபெருமான் தடுத்தாட் கொண்டார். சுந்தரர் ‘பித்தா’ என்று தொடங்கிச் சிவபெருமானைப் பாடி மகிழ்ந்தார். சுந்தரர் அடியார்கள் பெயர்களைத் தொகுத்துத் ‘திருத்தொண்டத் தொகை’ பாடினார். அவர் பாடிய அடியார் பலரின் பணிக்கு உடன் இருந்து உதவியவர்கள் சோழ நாட்டார்.

சுந்தரரின் இத்திருத் தொண்டத் தொகையே நம்பியாண்டார் நம்பியின் திருத்தொண்டர் திருவந்தாதிக்கும், சேக்கிழாரின் திருத்தொண்டர் புராணத்திற்கும் அடிப்படையாகும். இதைப் பாடக்காரணமானவர் வேளாண்குல விறன்மிண்டர்.

சேக்கிழார்

காக்கு நீதி இரவிகுலக்
          கழற்கால் வளவன் கனிந்தேவ
சேக்கி ழார்தம் திருவாயில்
          தெளிந்த முதல்நூல் செழுக்கதையின்
மேக்கு யாவும் திருவேட
          மெய்யே பொருளா வீடுபெற்றோர்
வாய்க்கு யாவும் புகழ்வேளாண்
          மரபோர் சோழ மண்டலமே
79