பக்கம் எண் :

58சோழமண்டல சதகம்

ஏர் எழுபது

குணங்கொள் சடையன் புதுச்சேரிக்
          குடையான் சேதி ராயன்முதல்
கணங்கொள் பெரியோர் பலர்கூடிக்
          கம்ப நாடன் களிகூர
இணங்கும் பரிசில் ஈந்துபுவி
          ஏழும் புகழ்ஏர் எழுபதெனும்
மணங்கொள் பெருங்காப் பியப்பனுவல்
          வகித்தார் சோழ மண்டலமே
81

வெண்ணெய்நல்லூர்ச் சடையப்ப வள்ளல், புதுச்சேரிக்கு உடையவனான சேதிராயன் என்னும் சோழநாட்டு வேளாளர்குலப் பெருமக்கள் அனைவரும் ஒன்றாகக் கூடிக் கம்பர் பெரிதும் மகிழப் பரிசுகள் பல ஈந்தனர். ஏழுலகும் வேளாளர் புகழ் பரவ ‘ஏர் எழுபது’ என்னும் பெருங்காப்பிய நூலைக் கம்பர் வேளாளர்கள் மீது பாடினார்.

புதுச்சேரி (புதுவை) திருவாரூருக்கு அண்மையில் உள்ளதொரு ஊர். பாண்டிச்சேரியின் வேறானது என்பர்.

மேடுவெட்டி வளப்படுத்தி மெய்வரம்பு நிலைநிறுத்திக்
கோடுவெட்டிக் காராளர் குவலயத்தைக் காத்திலரேல்
பாடுவெட்டிக் குறும்படக்கப் படைவேந்தர் அவர்விளைத்த
காடுவெட்டிப் பகையறுத்துக் கலிகளைய மாட்டாரே

(ஏர் எழுபது)

கம்பர் - இறுதிநாள்

ஆன்பால் நறுந்தேன் முக்கனிநீடு
          அமுதின் சுவையா றுடன்அருந்தித்
தான்பால் அணைய மறப்பதிலைச்